MURUGAN VANAKKATHIN MARUPAKKAM
முற்போக்குச் சிந்தனையோடு முருகனை அலசி ஆராய்ந்து தெளிவான சிந்தனைகளை இந்நூல் வழங்குகிறது. தமிழகத்தின் முக்கிய முருக வழிபாட்டுத் தலங்களை வரலாற்றுப் புரிதலோடு அணுகி புதிய தளங்களை அறிமுகப்படுத்துகிறது. வடநாட்டு ஸ்கந்த புராண மரபு முதல் தமிழ்நாட்டு முருகன் மரபு வரை நாத்திகத்தன்மை கலவாமல் தெளிவான மானுடவியல் சிந்தனையோடு பயணிக்கிறது இந்நூல். முருக வழிபாடு குறித்த கருத்தாடலைப் பண்பாட்டுத்தளத்தில் விரிவாகவும், ஆழமாகவும் முன்வைக்கிறது ‘முருகன் வணக்கத்தின் மறுபக்கம்’.
ART Nagarajan –
முருகன் வணக்கத்தின்
மறுபக்கம்
சிகரம்.ச.செந்தில்நாதன்.
புராணக் கதைகளுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும்
ஆட்பட்ட தமிழ் மக்களை அவர்களின்
சமய நிலைபாட்டோடு
கூடிய சமூக வரலாற்றை,
அது கடந்து வந்த பாதையை,
பொருளாதார அறிவியல், சமூக பின்னணியில்
புரிந்து கொள்வதற்கு அறிவுக் கண்கொண்டு இந்த நூல்
ஆய்வு செய்கிறது.
முற்போக்கு சிந்தனையோடு முருகனை அலசி ஆராய்ந்து தெளிவான சிந்தனைகளையும்,
தமிழகத்தின் மிக முக்கியமான முருகன் வழிபாட்டு தலங்களையும் வரலாற்று புரிதலோடு அணுகி அதன் மூலம் புதிய தளங்களை நமக்கு அறிமுகம் செய்கிறது.
வடநாட்டு ஸ்கந்த புராண
மரபு முதல் தமிழகத்தில்
முருகன் மரபுவரை
நாத்திகத் தன்மை கலவாமல் தெளிவான மானுடவியல் சிந்தனையோடு
பயணிக்கிறது இந்த நூல்.
சமய சக்திகளுக்குள் உள்ள மோதல்கள், முரண்பாடுகள்,
மூட பழக்க வழக்கங்களுக்கும்,
நம்பிக்கைகளுக்கும்,
எதிரான கலகக்குரல் எல்லா
சமயங்களிலும் இருந்ததை
மிகத்துல்லியமாக வெளிக் கொண்டு வந்திருக்கிறது.
தமிழ் சமயங்களில் தோன்றிய
பல ஞானிகள், சடங்குகளை எல்லாம் நிராகரித்தும் இருக்கிறார்கள்,
சீர்திருத்தமும் பேசியிருக்கிறார்கள்.
வடலூர் சத்திய ஞானசபைக்கும்,
காஞ்சி மடத்திற்கும் வேறுபாடு உண்டல்லவா.
வள்ளி திருமணம் முருகன் புராணங்களில் ஆதியிலிருந்து உண்டு எனும் போது,
முருகனுக்கு இன்னொரு திருமணம் எதற்கு?
வேடர்குல தலைவனை, குறத்தியின் கணவனை பிராமணர்கள் எப்படி வணங்கமுடியும்?
தமிழ்நாட்டு பாரம்பரியம் முருகனை விட்டுக் கொடுக்கவில்லை,
எனவே வட நாட்டு ஸ்கந்தமரபோடு
தொடர்பு படுத்தி, அசுரர்களால்
துன்பப் பட்டுக் கொண்டிருந்த
தேவர்களை காப்பாற்றி
அசுரர்களை அழித்ததற்கு
நன்றி தெரிவிப்பதற்காக இந்திரன் தனது மகள் தெய்வானையை
மணமுடித்து தந்ததாக
கதை எழுதி முருகனை சுப்ரமணியனாக்கி
வணங்கினர்.
தெய்வானை பற்றி நமது புராணங்களில் இல்லாதபோது எப்படி இடைச்செருகலானது என்பதை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டுகிறார்.
முருக வழிபாடு பற்றிய கருத்தாடலை பண்பாட்டு தளத்தில் ஆழமாகவும், விரிவாகவும் ஆராய்கிறது இந்த நூல்.
வாசிப்பு அறிவை மேம்படுத்தும் நாகராஜன்
வாசகர் வட்டம் மதுரை
06.04.2020.