TWINS
இரட்டையர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் பசிக்குமா, இருவரும் ஒரே நேரத்தில் பாலுக்கு அழுவார்களா, ஒருத்தருக்கு உடம்பு சரியில்லை என்றால் மற்றொருவருக்கும் உடம்பு முடியாமல் போகுமா, ஒன்றாக அழுவார்களா, ஒன்றாகச் சிரிப்பார்களா, இருவரும் எப்படி ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வார்கள்… இதுபோன்ற கேள்விகளை இரட்டையரைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் தினம் தினம் எதிர்கொண்டே ஆக வேண்டும்.
இந்த நூல் இரட்டையரைப் பெற்று வளர்த்தெடுத்த பெண்களின் அனுபவங்களையும், மருத்துவ ஆலோசனைகளையும் சொல்வதால், இரட்டையரைச் சுமக்கும் எல்லாப் பெண்களுக்கும் ஒரு வழிகாட்டி போல் இருக்கிறது. ஒரே கருப்பையில் சுமக்கப் போகும் இரட்டைக் கர்ப்பம் பற்றியும், அந்த நேரத்தில் உண்டாகும் பயங்கள் பற்றியும், பயம் நீங்க என்னென்ன செய்யலாம், மருத்துவரின் ஆலோசனைகள் என்னென்ன, பேறுகாலத்திற்கு முன்னும் பின்னும் தாய்க்கும் குழந்தைகளுக்கும் உண்டாகும் நோய்கள் என்னென்ன என்பது குறித்தெல்லாம் வைதேகி மிகுந்த அக்கறையுடன் எழுதியுள்ளார்.
இது குழந்தைகள் பற்றிய நூலா, மருத்துவ நூலா, பெண்களின் பேறுகாலம் பற்றிய நூலா என்றால், ‘எல்லாம் கலந்த கலவை’ என்றும் சொல்லலாம்..
Reviews
There are no reviews yet.