நீதிதேவன் மயக்கம்
Publisher:
பூம்புகார் பதிப்பகம் Author:
பேரறிஞர் அண்ணா
இராவணனை இரக்கமில்லா அரக்கன் என கம்பர் எழுதிய தீர்ப்பை சீராய்வு செய்ய ஆண்டவன் கட்டளையிட அது தொடர்பான வழக்கு நீதிதேவனின் அறமன்றத்தில் நடக்கிறது. ராவணனே தனது தரப்பை எடுத்துரைக்கிறான். கம்பர் எழுதியது எப்படி தவறு என்பதை மட்டுமல்ல தேவர்கள் எனக் கூறப்படுவோர், அக்கினி போன்ற பகவான்கள், விசுவாமித்திரர் போன்ற ரிஷிகள் எப்படி அநீதியானவர்கள் என்பதைக் காட்டுகிறான். பூலோகத்தில் இரக்கமற்ற முறையில் நடந்துகொள்ளும் நிலவுடமையாளரை, மருத்துவரை நீதிதேவனுக்குக் காட்டுகிறான். பெரிய புராணத்தில் வரும் சிறுதொண்டர் கதையையும், கோட்புலி நாயனார் கதையையும் உதாரணமாகக் காட்டி இரக்கம் என்பதன் விளக்கமென்ன என்று வாதிடுகிறான். அவனது கேள்விகளுக்கு விடை கூறாமல் நீதிதேவன் மயங்கிச் சாய்கிறார், அறமன்றத்தை விட்டு அவசரமாக வெளியேறும் கம்பர் கால் இடறி விழுகிறார். ராவணன் அவரைத் தாங்கிப் பிடித்து வெளியே அழைத்துச் செல்வதாக நாடகம் முடிகிறது.
24 காட்சிகளில் பூலோகம், மேலோகம் என இரண்டு உலகங்களில் மனிதர்கள், தேவர்கள், கடவுள்கள், காப்பியப் பாத்திரங்கள் எனப் பலரும் பங்கேற்பதாக இந்த நாடகம் அமைக்கப்பட்டிருக்கிறது.
Delivery: Items will be delivered within 2-7 days
Kathir Rath –
நீதிதேவன் மயக்கம்
ஒரு கோட்டை சின்னதாக்கனும்னா பக்கத்துல இன்னொரு பெரிய கோடு போடனும்
அதேதான் ஒரு கோட்டை பெரிதாக்க பக்கத்துல இருக்க கோட்டை சின்னதாக்கறதும்
இராமனை ரொம்ப நல்லவனா காட்டறதுக்கு இராவணன் மேல வீண்பழிய கம்பர் சுமத்திட்டதா பூலோகத்துல பேச்சு வரவும் மேலோகத்துல ஒரு மறுவிசாரனை அமைக்கப்படுது
நீதிதேவன்தான் விசாரிச்சு தீர்ப்பு வழங்கனும்
குற்றவாளி இராவணன்
குற்றம் சுமத்தியவர் கம்பர்
சாட்சிகளா இராமாயண கதாபாத்திரங்கள் மட்டுமில்லாம மனுதர்மத்தை நிறுவ புனையப்பட்ட அனைத்து ஆரிய பாத்திரங்களும் வரவழைக்கப்படுது
குற்றம் சுமத்தப்பட்ட இராவணனே எல்லாரையும் விசாரிக்கறார்
அவர் கேட்கற கேள்விகளுக்கு யாராலயும் பதில் சொல்ல முடியலை
ஒவ்வொரு முறையும் தீர்ப்பு சொல்ல முடியாத நீதிதேவன் மயங்கி விழறார்
பேசாம வால்மீகி எழுதுனதை அப்படியே மொழிபெயர்த்துருக்கலாமோன்னு கம்பர் புலம்ப ஆரம்பிக்கறார்.
இது 1947ல அறிஞர் அண்ணாவால எழுதப்பட்ட நாடகம்
அவரே இராவணனா மேடையில நடிச்சாராம்
சமீபத்துல வைகோ அந்த பாத்திரத்துல நடிச்சதா கேள்வி பட்டேன்
அதெல்லாம் பாக்க ஒரு கொடுப்பினை வேணும்
இது மாதிரி நிறைய புத்தகங்கள் இருந்தும் ஏன் இந்த புத்தகத்தை வாசிச்சன்னா போன வருசம் அண்ணாமலை பல்கலைகழக இளங்கலை பாடத்துல இருந்து இந்த பாடத்தை தூக்க முயற்சிச்சு எதிர்ப்பு கிளம்பவும் இந்துத்துவா கும்பல் விட்டுருச்சு
அப்படி என்ன இருக்குன்னு புத்தகமா வாங்கி வச்சுருந்தன். இன்னைக்குதான் படிச்சேன்
76 பக்கம்தான்.
பிடிஎஃப் ஆ கூகுள்ல தேடுனாலே கிடைக்கும்
படிக்க அரை மணி நேரம் கூட ஆகாது.