ஆசியாவும் மேனாடுகளின் ஆதிக்கமும்

Publisher:
Author:

380.00

ஆசியாவும் மேனாடுகளின் ஆதிக்கமும்

380.00

 

கே.எம். பணிக்கர் (1895-1963) நன்கு அறியப்பட்ட இந்திய வரலாற்று ஆய்வாளர்; பேராசிரியர். சுதந்திர இந்தியாவின் தூதராக மக்கள் சீனம், சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகளில் பணிபுரிந்தவர். சோசலிசச் சார்பு கொண்ட தாராளவாதி.
ஆசியாவின் மீதான மேலை நாடுகளின் ஆதிக்க வரலாற்றையும் அதன் விளைவுகளையும் எதிர்விளைவுகளையும் பற்றிய வரலாற்று ஆய்வே இந்த நூல்.
இந்நூல் பேசும் வரலாற்றின் தொடர்ச்சியாகவே உலக ஒழுங்கில் இன்றைய ஆசியா – ஐரோப்பா உறவுகள் இயங்குகின்றன. இன்று முன் எப்போதும்விட ஆசியாவுக்கும் மேலை உலகிற்கும் இடையேயான, குறிப்பாக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான அரசியல் – பொருளாதார – சமூக உறவுகள் உலகை மிகவும் ஆழமான நெருக்கடிக்கு இட்டுச் செல்கின்றன. இந்நிலையில் ஆசியாவில் சமூக விடுதலையைச் சிந்திக்கும், அறிவுப்புலப் பணியை மேற்கொள்ளும் எவரொருவரும் இச்சிக்கலான நிலைமையைப் பற்றி அறிமுகம் பெற்றிருப்பது அவசியம். அதற்கு இந்நூல் வாசிப்பு நல்ல தொடக்கமாக அமையும்.
இந்நூல் வெளிவந்து அரை நூற்றாண்டு கடந்து விட்டாலும், இந்நூலில் உள்ள காலனிய ஆதிக்கம் – காலனிய நீக்கம் பற்றி உணர்நிலை மிகக் கூர்மையானது.

Delivery: Items will be delivered within 2-7 days