ஏன் பெரியார்? ஏற்பும் மறுப்பும்
தமிழக அரசியல் வரலாற்றில் பெரியாரைப் போல் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்திய, இன்னமும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இன்னொரு தலைவர் இல்லை. அதிகம் விவாதிக்கப்படும், அதிகம் கொண்டாடப்படும், அதிகம் எதிர்க்கப்படும் ஒரு சமூகச் சிந்தனையாளராகவும் அவரே திகழ்கிறார்.
பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது? எப்படி அவரை மதிப்பீடு செய்வது? அவருடைய எழுத்துகளும் உரைகளும் பலவாறாக, பலரால் புரிந்துகொள்ளப்படுவது ஏன்? வேண்டுமென்றே அவருடைய சொற்கள் தவறாகத் திரிக்கப்படுகின்றனவா? அவருடைய பிம்பம் தேவைக்கும் அதிகமாக மிகையாக ஊதிப் பெரிதாக்கப்படுகிறதா? சாதி எதிர்ப்பு அரசியலுக்கு அவர் தேவையா, தேவையில்லையா?
இந்நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் பெரியாரைப் பல்வேறு கோணங்களிலிருந்து ஆராய்கிறது. பெரியாரை ஏற்பவரின் குரல், விமரிசிகர்களின் குரல், நிராகரிப்பவர்களின் குரல் மூன்றும் இதில் சேமிக்கப்பட்டிருக்கிறது. தி வயர் இணைய இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள் ஆங்கில வாசிப்புலகில் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியது. தமிழிலும் இந்த விவாதங்கள் நடைபெறவேண்டும் என்பதே இந்நூலின் ஒரே குறிக்கோள்.

சிறை என்ன செய்யும்?
மறைக்கும் மாயநந்தி
ஜோதிடக் கலைக் களஞ்சியம்
நபி பெருமானார் வரலாறு
செம்மணி வளையல்
கருத்தாயுதம்
போர் தொடர்கிறது
குழந்தை வளர்ப்பு சுகமான சுமை
கர்ப்பம் தரிக்க கை வைத்திய முறைகளும் மழலை பெறும் வழிகளும்
காம சூத்திரம்
கலைஞர் அமர காவியம்
பெண்ணிய இயக்கத்தில் தத்துவார்த்த போக்குகள்'
கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)
குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு மூலமும் உரையும்
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த கதை
கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்
கணிதமேதை இராமானுஜம்
ஊரெல்லாம் சிவமணம்
ஸ்ரீமத் பகவத் கீதை
தமிழ் இலக்கணக் களஞ்சியம்
எம்.ஜீ.ஆர்
என் கதை
ஜே கே தனி வழி நடந்த அற்புத ஞானி
ஸ்ரீமந் நாராயணீயம் (மூலமும் உரையும்)
தமிழ் மனையடி சாஸ்திரம்
தோகை மயில் 
Reviews
There are no reviews yet.