சாதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள்

Publisher:
Author:
Translator:

180.00

சாதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள்

180.00

சுகந்தி சிந்தித்துக்கொண்டிருக்க, அவளுடைய உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை வெப்பம் வெளியேறிக்கொண்டிருந்தது. சில கணங்களில் அவள் மீதே எரிச்சல் கொண்டாள். வேறு சில கணங்களில் இப்படி நடுராத்திரி இரண்டு மணிக்கு இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கவைத்த ராம்லால் மீது கோபம் கொண்டாள். பிறகு திடீரென்று இருவரையும் குறைசொல்ல முடியாது என்று நினைத்து, சேட் மீது எரிச்சல் கொண்டாள். இந்த எண்ணத்தில் அவளின் கண்கள், கைகால்கள் என்று உடலில் உள்ள ஒவ்வோர் அங்கமும், எங்காவது சேட்டைக் காண முடியுமா என்று வளைந்துகொடுத்தன. அவளுள் என்ன நடந்ததோ அது மறுபடியும், ஒரே ஒரு முறை மீண்டும் நடக்க வேண்டும் என்ற சங்கடமான ஏக்கம் தோன்றியது. அவள் மறுபடியும் அதேபோல் நடத்தப்பட்டால்… வெறிபிடித்த பூனை நகங்களைக் கொண்டு அந்த சேட்டின் தலைமுடியைப் பிடித்து, காரிலிருந்து வெளியே இழுத்துப்போட்டு அசதியுறும்வரை உதைக்கத் தொடங்கி… சக்தியெல்லாம் இழந்து, அசதியில் அமர்ந்து அழத் தொடங்கி…​ ​ – ‘அவமானம்’ சிறுகதையிலிருந்து..

Delivery: Items will be delivered within 2-7 days