1 review for 24 சலனங்களின் எண்
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
2 × ₹433.00
Elementary Principles of Philosophy
2 × ₹140.00
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
2 × ₹235.00
Dr. அம்பேத்கர் தன்னிகரற்ற தேசபக்தர்
2 × ₹75.00
THE TWO BUBBLES
1 × ₹330.00
THE FINAL SOLITUDE
2 × ₹380.00
English-English-TAMIL DICTIONARY
5 × ₹170.00
2700 + Biology Quiz
1 × ₹80.00
THE BELATED BACHELOR PARTY
1 × ₹190.00
English-English-TAMIL DICTIONARY Low Priced
2 × ₹150.00
Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)
1 × ₹380.00
1801
1 × ₹550.00
How the steel was Tempered
2 × ₹300.00
I.A.S ஆவது எப்படி?
2 × ₹120.00
16 கதையினிலே
2 × ₹95.00
Compact DICTIONARY Spl Edition
1 × ₹80.00
English-English-Tamil-Dictionary
1 × ₹580.00
2800 + Physics Quiz
1 × ₹85.00
200 பிரபலங்கள்: மறக்க முடியாத நிகழ்ச்சிகள்
1 × ₹120.00
ARYA MAYA - The Aryan Illusion
1 × ₹110.00
ORACLE தமிழில் ஒரு விளக்கக் கையேடு
1 × ₹110.00
Moral Stories
2 × ₹75.00
1000 கடல் மைல்
1 × ₹235.00
THE DRAVIDIAN MOVEMENT
1 × ₹115.00
The Glory That Was Tamil Culture
1 × ₹280.00
RSS ஓர் அறிமுகம்
2 × ₹20.00
Johnny Got His Gun
2 × ₹170.00
A Madras Mystery
1 × ₹225.00
100 கறி வகைகள்!
2 × ₹60.00
13 வருடங்கள்: ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்
2 × ₹220.00
IAS பொது அறிவு கேள்வி பதில்கள்
1 × ₹200.00
Mother
1 × ₹300.00
100 வகை கேக்குகள் வீட்டிலேயே எளிதில் தாயரிக்கலாம்!
1 × ₹50.00
15 நாட்களில் தமிழ் வழி ஹிந்தி மொழி
1 × ₹100.00
'நமக்கு நாமே' நாயகனின் முகநூல் முத்துக்கள்
1 × ₹90.00
நான் நாகேஷ்
1 × ₹240.00
பிரபல கொலை வழக்குகள்
1 × ₹220.00 Subtotal: ₹10,466.00
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
2 × ₹433.00
Elementary Principles of Philosophy
2 × ₹140.00
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
2 × ₹235.00
Dr. அம்பேத்கர் தன்னிகரற்ற தேசபக்தர்
2 × ₹75.00
THE TWO BUBBLES
1 × ₹330.00
THE FINAL SOLITUDE
2 × ₹380.00
English-English-TAMIL DICTIONARY
5 × ₹170.00
2700 + Biology Quiz
1 × ₹80.00
THE BELATED BACHELOR PARTY
1 × ₹190.00
English-English-TAMIL DICTIONARY Low Priced
2 × ₹150.00
Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)
1 × ₹380.00
1801
1 × ₹550.00
How the steel was Tempered
2 × ₹300.00
I.A.S ஆவது எப்படி?
2 × ₹120.00
16 கதையினிலே
2 × ₹95.00
Compact DICTIONARY Spl Edition
1 × ₹80.00
English-English-Tamil-Dictionary
1 × ₹580.00
2800 + Physics Quiz
1 × ₹85.00
200 பிரபலங்கள்: மறக்க முடியாத நிகழ்ச்சிகள்
1 × ₹120.00
ARYA MAYA - The Aryan Illusion
1 × ₹110.00
ORACLE தமிழில் ஒரு விளக்கக் கையேடு
1 × ₹110.00
Moral Stories
2 × ₹75.00
1000 கடல் மைல்
1 × ₹235.00
THE DRAVIDIAN MOVEMENT
1 × ₹115.00
The Glory That Was Tamil Culture
1 × ₹280.00
RSS ஓர் அறிமுகம்
2 × ₹20.00
Johnny Got His Gun
2 × ₹170.00
A Madras Mystery
1 × ₹225.00
100 கறி வகைகள்!
2 × ₹60.00
13 வருடங்கள்: ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்
2 × ₹220.00
IAS பொது அறிவு கேள்வி பதில்கள்
1 × ₹200.00
Mother
1 × ₹300.00
100 வகை கேக்குகள் வீட்டிலேயே எளிதில் தாயரிக்கலாம்!
1 × ₹50.00
15 நாட்களில் தமிழ் வழி ஹிந்தி மொழி
1 × ₹100.00
'நமக்கு நாமே' நாயகனின் முகநூல் முத்துக்கள்
1 × ₹90.00
நான் நாகேஷ்
1 × ₹240.00
பிரபல கொலை வழக்குகள்
1 × ₹220.00 Subtotal: ₹10,466.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
₹300.00 Original price was: ₹300.00.₹285.00Current price is: ₹285.00.
எழுத்தாளர், இயக்குனர், விநியோகஸ்தர், நடிகர் என பல துறைகளில் தொடர்ந்து இயங்கி வருகிறவர் கேபிள் சங்கர்.
ஒரு சினிமா எப்படி உருவாகிறது என்பது இன்றைக்கு இருக்கிற டிஜிட்டல் வளர்ச்சியினால் ரகசியங்கள் அற்றதாய் போய்விட்ட நிலையில், ஓர் சினிமா எப்படி அமைகிறது?. அப்படி அமைந்த சினிமா உருவாவதற்குள் அப்படம் சம்பந்தப்பட்ட 24 கிராப்ட் ஆட்களின் மனநிலை, பணம், மனோதத்துவ பிரச்சனைகள் எல்லாம் சேர்த்தது தான் அப்படத்தின் தலையெழுத்து. ஓர் படத்தின் வெற்றி தோல்விக்கு படத்தின் தரம் மட்டுமே காரணமில்லை. அதன் பின் நிறைய துரோகம், ஈகோ, வெறி காமம், காதல் எல்லாமே இருக்கிறது. ஒவ்வொரு திரைப்படத்திற்கு பின்னும் ஓர் நிஜ திரைக்கதை இருக்கிறது. அதை எழுதுகிறவர்கள் யாருக்கும் அதன் போக்கு தெரியவே தெரியாது. அப்படி தெரியாத் திரைக்கதையை தெரியும் என்று நம்பித்தான் சினிமாவுக்கான திரைக்கதையை படமாக்கிக் கொண்டிருக்கிறவர்களைப் பற்றிய் நாவல் தான் இது.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books

Kathir Rath –
சினிமா பற்றி எத்தனை நாவல்கள் தமிழில் வந்திருக்கின்றன? எத்தனை பெரிதாய் மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறது? எனக்குத் தெரிந்து சுஜாதாவின் கனவு தொழிற்சாலை, பாலகுமாரனின் கல்லூரிப் பூக்கள் இரண்டுதான்.
அதிலும் சினிமா பற்றிய புத்தகம் என்றாலே அனைவரும் கனவு தொழிற்சாலையை மட்டும்தான் குறிப்பிடுவார்கள். ஆனால் அந்நூல் வெளிவந்த பிறகு இவ்வளவு வருடங்களில் சினிமா எவ்வளவோ மாறி விட்டது? தொழில்நுட்பம் மட்டுமல்ல, அதன் விளம்பரத்தில் இருந்து வெளியீடு வரை சகலமும் சமூக வலைதளங்களையும் நம்பி இருக்கும் நிலை வந்து விட்டது. இப்போதைய சினிமா நிலை பற்றி விவரமாக நூல் வரவில்லை என்ற குறையை இந்த புத்தகம் தீர்த்திருக்கிறது.
இரண்டு சினிமா ஒரே நேரத்தில் துவங்கிறது.
ஒன்றின் இயக்குனர் பல வருடங்களாக உதவி இயக்குனராக, இணை இயக்குனராக பழம் தின்று கொட்டை போட்டவர்
இன்னொன்றில் புதிதாக வந்திருக்கும் திறமையான இளம் தலைமுறை
ஐடியில் பார்த்து வந்த நல்ல வேலையை விட்டு விட்டு அலைந்து திரிந்து ஹீரோவாகி இருக்கும் நாயகன்
அவனுக்கு தோழியாகி பின் காதலியாகி பின் ஒரு படத்தில் கதாநாயகியாகும் நாயகி
ஆந்திராவில் இருந்து தயாரிப்பாளருக்கு பலியாவதற்கென்றே வரும் இன்னொரு நாயகி
சாவதற்குள் சினிமா எடுத்து விட வேண்டும் என திருப்பூரில் சிரம பட்டு சம்பாதித்த பணத்தில் படம் எடுக்க வந்திருக்கும் ஒரு தயாரிப்பாளர்
சம்பாதித்த பணத்தை வைத்து அனைவரையும் தன் காலிலும் கதாநாயகிகளை தன் படுக்கையிலும் விழ வைப்பதற்காகவே படம் எடுக்க வரும் ஒரு தயாரிப்பாளர்
இன்னும் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள்.
இத்தனை மனிதர்களுடன் சினிமா எடுக்க துவங்குகிறார்கள். கதையும் துவங்குகிறது. அதன் பின் எங்கும் நிற்பதில்லை.
முதல்முதலாக சர்வர் சுந்தரம் படத்தில் உண்மையில் சினிமா எப்படி எடுக்கப்படுகிறது என்ற சில தொழில்நுட்பங்களை வெளிப்படையாக படமாக்கி இருப்பார்கள். உதாரணத்திற்கு மழை, புயல் போன்றவற்றை. அதற்கு மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு.
அது போல அதற்கடுத்து சினிமா பற்றி எடுக்கும் படங்களுக்கு சினிமாவை நேசிக்கும் கூட்டம் எப்போதும் முதல்நாளே சென்று விடும். நான் விரும்பும் ஒரு துறையைப் பற்றி விலாவரியாக பேசுகிறார்களே என்று. அழகிய தீயே படத்தில் வரும் சினிமா மேக்கிங் பற்றி உரையாடும் காட்சிகள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.
அதுபோன்ற ஒரு கதையை எழுத்து வடிவில் படிக்கும் வாய்ப்பு இந்த நாவலில் கிடைக்கும். ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வாரம் படிக்கலாம் என்றுதான் வாசித்தேன்.
இரண்டு நாளுக்கு பிறகு பாதி கதைக்கு மேல் என்னாகுமோ ஏதாகுமோ என்ற பதட்டம் தொடர்ந்து படிக்க வைத்து விட்டது.
கதை கேட்டு அட்வான்ஸ் பெறுவதில் இருந்து இருந்து பட வெளியீடு வரை படிக்கும் எனக்கே இவ்வளவு பிபி ஏறுகிறதே. படம் எடுப்பவர்களெல்லாம் மனிதர்களே இல்லை என்றுதான் தோன்றுகிறது. எத்தனை சோதனை, வேதனை, அவமானம்
அதிலும் ஒருவர் பற்றி இன்னொருவர் சமயம் பார்த்து பத்த வைப்பது இருக்கிறதே அப்பப்பபா, சமீபத்தில் இயக்குனர் செல்வமணியின் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் அவரது முதல் நாள் சூட்டிங் அனுபவத்தை கூறினார்.
விஜய்காந்த் வந்து மேக்கப் போட்டு தயாராகும் போது அழுகுரல். என்னடாவென பார்த்தால் காலுக்கு ஷூ லேஸ் கட்டும் மேக்கப் அசிஸ்டென்ட்
“என்னடா?”
“அண்ணே எவ்வளவு பெரிய செட்டு, 500 டேன்சர்ஸ் ஆடறாங்க”
“நல்லதுதானடா”
“அதுல நீங்க ஆடாம யாரோ ஆடறாங்களேண்ணே” என சரியாக பற்ற வைக்க வேறு மாதிரி வெடிக்கும்.
இதிலும் அப்படி பற்ற வைத்தலும் வெடித்தலுமாய் ஏகப்பட்ட தீபாவளி வேடிக்கை நிறைந்திருக்கிறது.
வழக்கமாக கேபிள் சங்கர் கதைகளென்றால் விரசங்கள் நிறைந்திருக்கும் என முத்திரை குத்தி இருக்கிறார்கள். அவரும் அப்படி இருந்தால் அட்டைப் படத்திலேயே ஏ சான்றிதழ் போடத் துவங்கி விட்டார். ஆனால் இந்த நூல் அப்படி அல்ல. அனைவரும் படிக்கலாம். விறுவிறுப்பாக சினிமா பற்றி படிக்கலாம். குறிப்பாக சினிமாவில் சேரும் எண்ணம் யாருக்காவது இருந்தால் உடனடியாக இதை வாசித்து விடுவது நல்லது.