Aangal
ஒரு ஆணுக்கு தனது வாழ்க்கையின் ஏதாவது ஒரு பருவத்தில், தன் வாழ்க்கையை நிறுத்தி வைத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால்,, தன் இளமைக் காலத்தில்தான் நிறுத்தி வைத்துக்கொள்வான். இளமைக் காலம்… ஆண்களின் மகத்தான கொண்டாட்டக் காலம். ஒரு முடிவே இல்லாத இனிய கனவு போல் நீண்டுகொண்டிருந்த நமது இளமைக்காலம், எவ்வளவு வேகமாக கலைந்துவிடுகிறது? எவ’வளவு வேகமாக நமது இளமையின் ஈரச்சிறகுகள் உதிர்ந்துவிடுகிறது?கண்களில் நீர் வர நண்பர்களுடன் சிரித்த அந்த டீக்கடை பெஞ்சுகளை யார் தூக்கிக்கொண்டு போனார்கள்? ஒரே ஒரு பெண்ணின், ஒரு வினாடி பார்வைக்காக நாள் முழுக்க நின்றுகொண்டிருந்த பேருந்து நிறுத்தங்களை யார் இடித்தார்கள்? ரயில் நிலையத்தில் குமுறி, குமுறி அழுதுகொண்டே பிரிந்த கல்லூரி நண்பர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? யாரோ ஒரு இளம் பெண்ணின் தலையிலிருந்து விழுந்த ரோஜாப்பூவை எடுத்துக் கொடுத்தபோது புன்னகைத்த அல்லது முறைத்த தேவதை இப்போது எத்தனை தேவதைகளுக்கு தாய்? கடைசி வரையிலும் கண்களால் மட்டுமே பேசிவிட்டு காணாமல் போன இளம் பெண்கள், இப்போதும் ஆண்களின் கவிதைகளில் வாழ்ந்துகொண்டிருப்பது அவர்களுக்குத் தெரியுமா? குரூப் ஸ்டடி என்று குரூப்பாக கெட்டுத் திரிந்த இரவுகள் ஏன் விடிந்தது?

திராவிட இயக்க வரலாறு - பாகம் 2 
Reviews
There are no reviews yet.