மரணப் படுக்கையிலும் படிப்பை நேசித்தவர்கள் இரண்டு பேர் ஒருவர் பகத்சிங், இன்னொருவர் அறிஞர் அண்ணா.
பகத்சிங்கை தூக்கில் ஏற்றுவதற்காக அழைக்கிறபோது, பகத்சிங் கேட்டார் “நாளை தூக்கில் போட்டுக் கொள்கிறீர்களா?” “ஏன்?” என்று கேட்டபோது லெனின் எழுதிய what is to be done? என்கிற புத்தகத்தை படித்துக்கொண்டு இருப்பதால் ஒரு நாள் தள்ளி வைக்குமாறு கேட்டார். அதேபோல அண்ணவிடம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் “புதன்கிழமையோ வியாழக்கிழமையோ அறுவை சிகிச்சை இருக்கலாம்” என்றார் டாக்டர் “அப்படியா? வியாழன் வைத்துக் கொள்ளலாமா?” என்று மருத்துவரைப் பார்த்து கேட்டார் அண்ணா. சரி வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு “புதனில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா என்று அண்ணாவிடம் கேட்டார் மருத்துவர்?” ஒன்றும் இல்லை, மேரி கொரேலி (Marie Corelli) எழுதிய தி மாஸ்டர் சிறிஸ்டியன் (The Master Christian) புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன் புதன் இரவுக்குள் படித்து முடித்துவிடுவேன். வியாழன் அறுவை சிகிச்சையை வைத்துக் கொள்ளுங்கள்.” என்றார்.
-இந்நூலிலிருந்து….

சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
பதஞ்சலி யோக சூத்திரம் 


Reviews
There are no reviews yet.