அழகிய நதி : 18ம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
மகாதேவன் காலனியம் விடைபெற்றுச் சென்று பல ஆண்டுகள் கழிந்த பிறகும் அதன் தாக்கம் இன்றுவரை இங்கே செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஊடகங்களிலும் காலனியப் புனைவுகளே வரலாறாகப் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தப் பின்னணியில் தரம்பாலின் ஆய்வுகள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. 18-ம் நூற்றாண்டு இந்தியா உண்மையில் எப்படி இருந்தது என்பதை பிரிட்டிஷார் ஆவணங்களில் இருந்து தரம்பால் வெளிப்படுத்தும்போது வியக்காமல் இருக்கமுடியவில்லை. · வானவியலில் மிகப் பழங்காலத்திலேயே மகத்தான சாதனைகள் படைத்தவர்கள் இந்தியர்கள். · கிரேக்கர்களைவிடவும் இந்துக்கள் அல்ஜீப்ராவில் சிறந்து விளங்கி இருக்கின்றனர். · இந்துஸ்தானின் எஃகு ஐரோப்பிய எஃகைவிட மிக உயர் தரத்தில் இருந்திருக்கிறது. · இந்திய இரும்புத் தொழிலின் எளிமை, சிக்கனம், செய் நேர்த்தி, உயர் தரம் ஆகியவை அன்றைய ஐரோப்பியத் தொழில் நுட்பத்தைவிட மேலானதாக இருந்திருக்கிறது.· இந்துஸ்தானின் விதைக் கலப்பை தொழில்நுட்பமானது ஐரோப்பிய கலப்பைத் தொழில்நுட்பத்தைவிடச் சிறந்தது .· அம்மை நோய்க்கான இந்திய தடுப்பு சிகிச்சை முறையின் மருத்துவ அறிவியல் அம்சங்கள், உணவுப் பத்தியம் ஆகியவை பிரிட்டிஷாரின் மருத்துவத்தைவிட மிகச் சிறந்ததாக இருந்திருக்கிறது. இந்நூல் நெடுகிலும் தரம்பால் பதிவு செய்திருக்கும் அசலான வரலாற்று உண்மைகள் ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதத்தில் ஆழ்த்தும் ஆற்றல் கொண்டவை. ஆய்வு என்றால் என்ன, வரலாறு என்றால் என்ன, இந்தியா என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கான மிகச் சிறந்த நூல் இது.

CHRONIC HUNGER
Carry on, but remember!
A Madras Mystery 


Reviews
There are no reviews yet.