Chellame
பெற்றோராக இருப்பதன் பேரின்பத்தை வேறு எந்த ஒரு இன்பமும் தந்துவிட முடியுமா? ஒரு குட்டிச் செல்லம் நம் வாழ்வையே மாற்றி அமைக்கும். ஒவ்வொரு நாளையும் புத்துணர்வுடன் பிறக்கச் செய்து, புத்தம்புது அனுபவங்களை அள்ளி வழங்கும். குழந்தை வளர்ப்புப் பயணத்தில் சுவாரஸ்யங்களுக்கும் சந்தேகங்களுக்கும் பஞ்சமே இல்லை. புரிதல்களுக்கும் புதிர்களுக்கும் குறைவே இல்லை. கனவுகளுக்கும் கண்ணீருக்கும் எல்லையே இல்லை!
ஏற்கனவே குழந்தை பெற்றெடுத்து வளர்த்தவர்களுக்கும் கூட, அடுத்த குழந்தை பெறுகையில் ஆயிரம் சந்தேகங்கள்… அடுக்கடுக்காக கேள்விகள்… அண்டை வீட்டுக்காரர்களிடம் கேட்பதா? அம்மா&அப்பாவிடம் கேட்பதா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விளக்கம் அளித்தால் என்ன செய்வது? இந்தக் குழப்பங்கள் எதுவும் இனி ஏற்படாவகையில், ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது போன்றே – ஸ்டெப் பை ஸ்டெப் முறையில் எழுதப்பட்ட நூல்தான், இந்தச் செல்லமே!
ஆழ்ந்த அனுபவம் கொண்ட குழந்தை நல மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் எழுதப்பட்ட, முழுமையான குழந்தை வளர்ப்பு நூல் இது. இப்படி, பன்முகத்தன்மையில் உருவான குழந்தை வளர்ப்பு நூல் இதுவரை தமிழில் இல்லை என்றே கூறலாம். இந்நூல் உங்களை அழகான தாய்மைக் காலத்துக்கு கரம் பிடித்து அழைத்துச் செல்லும். பெற்றோரையும் குழந்தைகள் நிலையில் இருந்து உணரச் செய்யும். கோடிக்கணக்கான குழந்தைகளின் மழலைப் பருவம் தித்திக்க வழி செய்யும். ஹேப்பி பேரன்டிங்!.

THE TWO BUBBLES
PFools சினிமா பரிந்துரைகள்
Quiz on Computer & I.T.
13 மாத பி.ஜே.பி ஆட்சி
Bastion
21 ம் விளிம்பு
English-English-TAMIL DICTIONARY
ARYA MAYA - The Aryan Illusion
Arya Maya (THE ARYAN ILLUSION)
RSS ஓர் அறிமுகம்
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
Mother 
Reviews
There are no reviews yet.