COVID-19 NERUKADIYUM SURAIAADALUM
இந்நூல் இந்தியப் பொருளாதாரம் பற்றியது! கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பொது முடக்கம் சாமானிய மக்கள் மீது மிக கடுமையான விளைவுகளை ஏற்படுத்திள்ளதை நாம் அனைவரும் அறிவோம். இத்தகைய வரலாறு காணாத மருத்துவ, பொருளாதார நெருக்கடி சமயத்தில் இந்திய ஒன்றிய அரசு மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மீட்க செலவு செய்யவில்லை. இந்திய ஒன்றிய அரசு ஏன் செலவு செய்யவில்லை? செலவு செய்யவிடாமல் அதை தடுப்பது எது? என்ற கேள்விக்கு இந்நூல் பதிளிக்கிறது. இந்திய ஒன்றிய அரசு செலவீனத்தை அதிகரித்தால் அந்நிய முதலீடுகள் வாராது. அவ்வாறு வரவில்லை என்றால் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு சீர்குலைந்துவிடும். ஏன் சீர்குலைந்துவிடும் என்றால், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு என்பது இந்தியா ஏற்றுமதி செய்து ஈட்டியது கிடையாது. மாறாக, அந்நிய கடன்களால் ஆனது. செலாவணி கையிருப்பு மிகுதியாக இருந்தால்தான் இறக்குமதி செய்ய முடியும். இல்லையேல் நாடு திவாலாகிவிடும். இதுதான் இந்தியப் பொருளாதாரத்தை அந்நிய மூலதன நுகத்தடியில் பிணைத்திருக்கும் இணைப்பாகும். இதை அறுக்க முடியாதா என்றால் முடியும். ஆனால், அதற்கு நமது ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. ஏனென்றால், அவர்களின் நலனும் அந்நிய மூலதனத்தின் நலனும் ஒன்றோடொன்று பிணைந்துள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் மீது பொது முடக்கம் ஏற்படுத்திய தாக்கம் பொருளாதாரத்தை மீட்க அரசு தனது செலவீனத்தை அதிகப்படுத்தாது ஆகியவற்றை புரிந்து கொள்ளவும் உலக ஒழுங்கில் இந்தியவின் இடத்தைப் பற்றி புரிந்து கொள்ளவும் இந்நூலை வாசிக்கவும்
Reviews
There are no reviews yet.