இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை
தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை						 ஈரம் கசிந்த நிலம்
ஈரம் கசிந்த நிலம்						 துளசிதாசர் முதல் மீராபாய் வரை
துளசிதாசர் முதல் மீராபாய் வரை						 அழகிய பெரியவன் கதைகள்
அழகிய பெரியவன் கதைகள்						 உயிர்த் தேன்
உயிர்த் தேன்						 ஒற்றன்
ஒற்றன்						 அச்சுப் பண்பாட்டில் ஆதி திராவிடர் அறிவு மரபு
அச்சுப் பண்பாட்டில் ஆதி திராவிடர் அறிவு மரபு						 வள்ளலார்
வள்ளலார்						 ஆலமரத்துப் பறவைகள்
ஆலமரத்துப் பறவைகள்						 இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)
இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)						 இந்து ஆத்மா நாம்
இந்து ஆத்மா நாம்						 அவன் அவள்
அவன் அவள்						 பிசினஸ் டிப்ஸ்
பிசினஸ் டிப்ஸ்						 இராமாயணப் பாத்திரங்கள்
இராமாயணப் பாத்திரங்கள்						 எஞ்சும் சொற்கள்
எஞ்சும் சொற்கள்						 மேடம் ஷகிலா
மேடம் ஷகிலா						 இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்						 தமிழகப் பாறை ஓவியங்கள்
தமிழகப் பாறை ஓவியங்கள்						 வயல் மாதா
வயல் மாதா						 தொல்காப்பியம் (முழுவதும்)
தொல்காப்பியம் (முழுவதும்)						 எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்						 கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே!
கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே!						 சாம்பலிலிருந்து பசுமைக்கு: ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ
சாம்பலிலிருந்து பசுமைக்கு: ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ						 கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகள்
கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகள்						 சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும்
சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும்						 அழகிய மரம் : 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி
அழகிய மரம் : 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி						 கர்னலின் நாற்காலி
கர்னலின் நாற்காலி						 மண்ணுக்கேற்ற மார்க்சியம்
மண்ணுக்கேற்ற மார்க்சியம்						 Dictionary of COMPUTER
Dictionary of COMPUTER						 ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)						 வகுப்பறைக்கு வெளியே
வகுப்பறைக்கு வெளியே						 இரவுக்கு முன்பு வருவது மாலை
இரவுக்கு முன்பு வருவது மாலை						 இன்று புதிதாய்ப் பிறந்தோம்
இன்று புதிதாய்ப் பிறந்தோம்						 எருமை மறம்
எருமை மறம்						 சி. இலக்குவனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சி. இலக்குவனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 லெனின் வாழ்க்கைக் கதை
லெனின் வாழ்க்கைக் கதை						


Reviews
There are no reviews yet.