இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
இசைக்கச் செய்யும் இசை
யானைக்கனவு
மூப்பர்
தேர்ந்தெடுத்த கதைகள்
தமிழ் இலக்கணக் களஞ்சியம்
வாக்குமூலம்
பாரதியின் பெரிய கடவுள் யார்?
அயலான்
உன்னைச் செதுக்கி உயர்வு பெறு
பகிரங்கக் கடிதங்கள்
உலராக் கண்ணீர்: பழங்குடியினரின் வாழ்வியல் துயரம்
தொல்லியல் பார்வையில் சோழப்பேரரசி சோழமாதேவி கைலாயமுடையார் திருக்கோவில்
மத்தி
ஐ லவ் யூ மிஷ்கின்
உன்னை அறிந்தால்
வானமே நம் எல்லை
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
எம்.கே. தியாகராஜ பாகவதர்- பி.யு.சின்னப்பா திரையிசைப்பாடல்கள்
இளையவர்களின் புதுக்கவிதைகள்
சூடு... சொரணை...சுயமரியாதை...
தப்புத் தாளங்கள்
கண்ணிலே இருப்பதென்ன!
இவர்தான் கலைஞர்
அனலில் வேகும் நகரம்
உடல் பச்சை வானம்
முல்லா கதைகள்
குடும்பமும் அரசியலும்
மக்களின் அரசமைப்பு சட்டம்
மனிதப் பிழைகள்! (நாவல்)
அவள் ராஜா மகள்
நாடிலி
யோக சாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை
நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்
தென் இந்திய வரலாறு
வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
நரக மயமாக்கல்
நம்மாழ்வார்
யாரோ சொன்னாங்க
தொ.பொ. மீனாட்சி சுந்தரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
உள்பரிமாணங்கள்
வகுப்புரிமை போராட்டம்
இது ஒரு காதல் மயக்கம்
வசந்த மனோஹரி
உன்னை நான் சந்தித்தேன்
இந்தியப் பிரிவினை : உதிரத்தால் ஒரு கோடு
நான் உங்கள் ரசிகன்
செல்லாத பணம்
குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்
விடாய்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
திருக்குறளும் பரிமேலழகரும்
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம்
குடியாட்சிக் கோமான்
இவன்தான் பாலா
வஞ்சியர் காண்டம்
நவோதயா பள்ளிகள் கூடாது ஏன்?
அற்ற குளத்து அற்புத மீன்கள்
நிழல்முற்றத்து நினைவுகள்
சிங்கப் பெண்ணே
நல்லவண்ணம் வாழலாம்
தொலைவில் உணர்தல்
சாதியம்: கைகூடாத நீதி
பஞ்சமி நில உரிமை
மகாத்மா காந்தி
மலர் விழி
நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்
நரகாசுரப் படுகொலை
வாழும் கலை மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்
நாகநாட்டரசி குமுதவல்லி
சர் ஏ.டி.பன்னீர் செல்வம்
இவான்
மிச்சக் கதைகள்
பெண் ஏன் அடிமையானாள்?
கனவு மெய்ப்பட வேண்டும்
ஆலய அர்ச்சனை - ஆகமங்களின் வழியில் விதிமுறைகள்
பாபர் மசூதி இறுதி தீர்ப்பு: முடிவல்ல, தொடக்கம்!
நேற்றின் நினைவுகள்
மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம்
ஆ'னா ஆ'வன்னா
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
விக்கிரமாதித்தன் கதைகள்
ஊரெல்லாம் சிவமணம்
அப்பா 


Reviews
There are no reviews yet.