எம்.எஸ். சுப்புலட்சுமி – உண்மையான வாழ்க்கை வரலாறு

Publisher:
Author:

205.00

எம்.எஸ். சுப்புலட்சுமி – உண்மையான வாழ்க்கை வரலாறு

205.00

எம் எஸ் சுப்புலட்சுமி உண்மையான வாழ்க்கை வரலாறு என்ற இந்த நூலில் புகழ்பெற்ற பத்திரிகையாளரும் வாழ்க்கை வரலாறு ஆசிரியருமான டி.ஜே .எஸ் ஜார்ஜ் எம் எஸ் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் மதுரையின் ஹனுமந்தராயர் கோயில் தெரு முதல் கும்பகோணம் மெட்ராஸ் மியூசிக் அகாடமி ராஜ்பவன் ராஷ்டிரபதி பவன் ஐ.நா.சபை வரை உடன் பயணித்தாற்போன்ற உணர்வை நமக்கும் ஏற்படுத்தும் விதத்தில் எழுதியுள்ளார். அத்தோடு அந்த காலகட்டத்தில் சமூக வாழ்க்கை, சாதிய வேறுபாடுகள், இசைக்கலைஞர்கள், ஆளுமைகள், முதலமைச்சர்கள், பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், பத்திரிகைகள், அரசியல் கட்சிகள் ஆகிய அனைத்தையும் தொட்டுச் செல்லும் வகையில் கதைத் தலைவியின் வாழ்க்கையையும் அதன் பின்புலமும் தெளிவாய் துலங்கும் வண்ணம் எழுதியுள்ளார். காய்தல் உவத்தல் இன்றி, மலினப்படுத்துதலோ அல்லது அரிதாரம் பூசி உண்மையை மறைத்தலோ இன்றி, சாதாரணமாக இந்தியாவில் எழுதப்படும் போற்றி, போற்றி பிள்ளைத் தமிழ்கள் போலன்றி வரலாற்று ஆய்வின் துல்லியத்துடன் மைய நீரோட்ட பத்திரிகை எழுத்தின் சுவையுடனும் எழுதியுள்ளார். எல்லாம் அறிந்த பின் அந்த மகத்தான கலைஞரின் மீது நாம் கொண்ட மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கின்றதே தவிர குறைவதில்லை.

Delivery: Items will be delivered within 2-7 days