இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

ஏழு தலைமுறைகள்
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
நினைப்பதும் நடப்பதும்
பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
ஔரங்கசீப்
தமிழகத் தடங்கள்
திருவருட்பயன்
சில பெண்கள் சில அதிர்வுகள்: வேத, இதிகாச, புராண காலங்களில்
ரப்பர்
இந்திய நாத்திகம்
சிக்மண்ட் ஃபிராய்டு: ஓர் அறிமுகம்
உண்மை விளக்கம் (உரை நூல்)
ஆனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் (மூன்று பாகங்கள்)
கார்ப்பரேட் - காவி பாசிசம்
ஒரு தலித்திடமிருந்து
தாம்பூலம் முதல் திருமணம் வரை
கனவு மெய்ப்பட வேண்டும்
மனிதனுக்கு ஒரு முன்னுரை
நரக மயமாக்கல்
உதயபானு
பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரசல்
பெரிய புராணம்-அறுபத்துமூவர் வரலாறு
கோரிக்கைகள் நிறைவேற்றும் கோயில்கள்
லஷ்மி சரவணகுமார் கதைகள் (2007-2017)
ஆ. கார்மேகனாரின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
உலகின் கடைசி மனிதன்
மன்னித்துவிடு இன்பா!
எது தர்மம்
சிவ புராணம்
ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்
பொய்த் தேவு
முதல் காதல்
இந்தக் கணத்தில் வாழுங்கள்
யவன ராணி (இரண்டு பாகங்கள்)
புதுமைப்பித்தம் : வாசகத் தொகை நூல் 3
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை)
மனவாசம்
ஆக்காண்டி
காது வளர்த்தல் அல்லது காது வடித்தல்
பாரதி விஜயம் (முதல் தொகுதி)
இராகபாவார்த்தம்
மலர் மஞ்சம்
நாளைக்கும் வரும் கிளிகள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-15)
நிழல்கள்
இந்த இவள்
மனுநீதி போதிப்பது என்ன?
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
கருங்கடலும் கலைக்கடலும்
முற்றா இளம்புல்
மண்ணும் மக்களும்
காகித மலர்கள்
பழமை வாய்ந்த திருத்தலங்கள் நாற்பது
பம்மல் சம்பந்தனார் (பேசும்படத் தொழில்நுட்பங்கள் - அனுபவங்கள்)
அவளை மொழிபெயர்த்தல்
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்
கதைப்பாடல்களில் கட்டபொம்மன்
புரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள்
ஒரு பிரயாணம் ஒரு கொலை
தடை செய்யப்பட்ட புத்தகம்
பெரியார் ஒரு வாழ்க்கைப் பாடம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு
தவிர்க்கவியலா தெற்கின் காற்று (உலகச் சிறுகதைகள்)
இந்து சமய தத்துவங்கள் ஐநூறு
எட்டு நாய்க்குட்டிகள்
நபி பெருமானார் வரலாறு
நான் வந்த பாதை
கர்னலின் நாற்காலி
செம்மொழித் தமிழ்: மொழியியல் பார்வைகள்
ரமணரின் பார்வையில் நான் யார்?
பெண் மணம்
பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம்
எருமை மறம்
மீள் வருகை
பாரதி: கவிஞனும் காப்புரிமையும்
உணவே மருந்து
இலக்கும் நோக்கமும்
பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்
சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
உதயதாரகை
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 4)
எண்ணித் துணிக கருமம்
உலகை வெல்ல உன்னை வெல்
கசவாளி காவியம்
தமிழா நீ ஓர் இந்துவா?
நூலக மனிதர்கள்
ஒலியின் பிரதிகள் (அமிர்தம் சூர்யா உரைகள்) பாகம் - 1
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 7)
சரித்திரம் படைத்த இந்தியர்கள் 


Reviews
There are no reviews yet.