தாழ்த்தப்பட்டோரின் நவீன அரசியல் செயற்பாட்டு முன்னோடிகளில் முதன்மையானவர் இரட்டைமலை சீனிவாசன் (1860-1945). முழு வாழ்க்கையை அல்லாமல் தன் அரசியல் வாழ்வின் முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்துச் சுருக்கமாக அவர் எழுதிய தன்வரலாறு தான் ‘ஜீவிய சரித்திர சுருக்கம்.’ தமிழகத் தாழ்த்தப்பட்டோரின் அரசியல் செயற்பாடுகள் பற்றிய நூறாண்டுகளுக்கும் மேலான தரவுகள் தேடியெடுக்கப்பட்டுத் தமிழ்ச் சமூக அரசியல் வரலாறு பற்றிய புதிய பார்வைகள் மேலோங்கிவரும் பின்னணியில் இந்நூல் இப்போது பதிப்பிக்கப்படுகிறது.
ஜீவிய சரித்திர சுருக்கம்
Publisher: காலச்சுவடு பதிப்பகம் Author: இரட்டைமலை ஆர்.சீனிவாசன்₹115.00
ஜீவிய சரித்திர சுருக்கம்
தமிழ ஒடுக்கப்பட்டோர் அரசியல் முன்னோடிகளில் முதன்மையானவர் இரட்டைமலை ஆர்.சீனிவாசன் ( 1860 – 1945 ). அவரின் தன்வரலாற்று நூல் இது. தன் அரசியல் பயணத்தின் பிரதான தருணங்களைத் தேர்ந்தெடுத்துச் சுருக்கமாக இந்நூலில் முன்வைத்திருக்கிறார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் நவீன அரசியல் தளம் சார்ந்து தலித்துகளிடையே உருவான அரசியல் எழுச்சி, 20ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியினூடாக தலித்துகள் மேற்கொண்ட சட்டரீதியான தலையீடுகள் ஆகியவற்றை விவரித்துச் செல்லும் இந்நூல் தனிமனிதரின் அரசியல் பயணமாக மட்டும் நில்லாமல் இந்திய / தமிழக வரலாற்றின் இன்றியமையாத காலகட்டத்தை பிரதிபலிக்கும் வரலாற்று ஆவணமாக மாறி நிற்கிறது. இந்நூலிலிருந்து கிடைக்கும் தரவுகள் மூலம் தாழ்த்தப்பட்டோர் வரலாற்றை மட்டுமல்ல தமிழக அரசியல் வரலாற்றையும் புதிய பரிமாணத்தோடு வாசிக்க இயலும்.
ஒடுக்கப்பட்டோர் அரசியல் செயல்பாடுகள் பற்றிய புதிய தரவுகளும் அதனூடாக மாற்றுப் பார்வைகளும் துலங்கிவரும் இன்றைய பின்னணியில் விரிவான அடிக்குறிப்புகள், பின்னிணைப்புகள் ஆகியவற்றை இணைத்து இந்நூலைப் பதிப்பித்திருக்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.