K.Balachandhar
அப்பா பெண் என்ற உறவுமுறையில் இருபது வருடங்கள். பின்னால் தொழில்முறையில் திரைப்படத் தயாரிப்பாளராய் அவருடன் பழகிய இருபது வருடங்கள் . சுமார் நாற்பது ஆண்டு கணக்கில் அவரிடம் கேட்கவிட்டுப் போன கேள்விகள் பல உண்டு. கேட்காமலேயே கிடைத்த பதில்கள் பலவுண்டு. இதற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல், அவர் யார், வாழ்க்கையைப் பற்றி அவருடைய அணுகுமுறை என்ன? அவருடைய கனவுகள், அவற்றை அடைய அவரிடம் இருந்த பண்புகள், அவரை வழிநடத்திச் சென்ற மனிதர்கள், கால் பதித்த தடங்கள், ஆளுமையைச் செதுக்கிய சம்பவங்கள் எல்லாம் அடங்கிய அழகிய நீண்ட கட்டுரையாக அமைந்திருக்கிறது இப்பதிவு.திரு சோம வள்ளியப்பன் அப்பாவிடம் நேரடியாக பேசிக் கேட்டு வாங்கிய நினைவு பகிர்தல்களை சுவை குன்றாமல் உணர்வு பூர்வமாய் பதிவு செய்திருக்கிறார். முற்றுப்பெறாத பதிவாக இருந்தாலும், அப்பா சொன்ன விஷயங்களை வாசகர்களுடன் பகிர்வது தன் கடமை என அவர் நினைத்தது நூற்றுக்கு நூறு சரியே. அந்த மகா மேதைக்கும் வாசகர்களுக்கும் இடையில் ஒரு அற்புதமான பாலமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார். –புஷ்பா கந்தசாமி

மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள் 
Reviews
There are no reviews yet.