அரசர் பேச ஆரம்பித்தார். ‘நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை பிள்ளைகளே! கேளுங்கள்: இந்த அழிவை நான் கொண்டுவரவில்லை. எனக்கு செல்வங்களோ சொத்துக்களோ இல்லை. நிலமும் இல்லை, பேரரசும் இல்லை. நான் எப்போதுமே ஒரு பிச்சைக்காரன். ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு இறைவனைத் தேடிக்கொண்டிருக்கும் சூஃபி. என்னைச்சுற்றி சிலர் இருப்பதால் எனக்கான தினசரி ரொட்டியை நான் சாப்பிடுகிறேன். ஆனால் இப்போது மீரட்டில் பற்றவைக்கப்பட்ட ஒரு மாபெரும் தீநாக்கு அந்த ரொட்டியையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. அது டெல்லியின் மீது விழுந்து இந்த மகத்தான நகரத்தை பற்றவைத்துவிட்டது. இப்போது நானும் என்னுடைய வம்சாவளியும் அழிந்துபோக இருக்கிறோம். மகத்தான தைமூரிய [முகலாயர்கள்] பேரரசர்களுக்கு உண்டான பெயர் இப்போதும் உயிர்த்திருக்கிறது, ஆனால் விரைவில் அந்தப் பெயரும் முற்றாக அழிக்கப்பட்டு மறக்கப்பட்டுவிடும்.
கடைசி முகலாயன்: ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி
Publisher: எதிர் வெளியீடு Author: வில்லியம் டேல்ரிம்பிள் | இரா. செந்தில்Original price was: ₹750.00.₹725.00Current price is: ₹725.00.
கடைசி முகலாயன் (ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857) இந்நூல், 1857 நடந்த கலவரத்தை முதல் இந்திய சுதந்திரப்போர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது முதல் சுதந்திரப்போர் அல்ல. அது சிப்பாய் கலகம்தான் என்பதை எடுத்துரைக்கிறது இந்நூல்.
வில்லியம் டேல்ரிம்பிள் எழுதிய நூல்களிலேயே அற்புதமான படைப்பு இந்த ‘கடைசி முகலாயன்’. இது அன்றைய அரசர்கள், நாட்டியக்காரர்கள், வணிகர்கள் மற்றும் சிப்பாய்கள் என 4 பரிமாணங்களில் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. குழப்பமான சூழ்நிலைக்கு நடுவிலும் மக்கள் தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்த விதத்தை ஆவணப்படுத்தியிருப்பதன் மூலம் வரலாற்று நிகழ்வுகளை தற்காலத்திய புரிதலோடு இந்த எழுத்தாளர் இணைத்திருக்கும் விதம்தான் இப்புத்தகத்தின் சிறப்பு.
அந்த காலத்தில் பிரிட்டிஷ் கலக ஆவணங்கள் என்ற அமைப்பு அப்போது நடந்தவற்றை எல்லாம் பதிவு செய்து வைத்துள்ளனர். அதன்மூலம் பிரிட்டிஷ் கவுன்சில் ஆஃப் லைப்ரரியில் இருந்து தரவுகளை எடுத்து இந்நூலை எழுதியிருக்கிறார் வில்லியம் டேல்ரிம்பிள். இப்புதக்கத்தைப் பொருத்தவரை அனைத்து தகவல்களுக்கும் உரிய தரவுகளை கடைசி 40 பக்கங்களுக்கு மேல் சொல்லப்பட்டிருக்கிறது. வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை கடைசி முகலாயன் காட்டியிருக்கிறது.
அரசர்களின் வறட்டுப் பிடிவாதம், போர்கள் மற்றும் உடன்படிக்கைகள் மட்டுமின்றி கடந்த காலத்தை நிகழ்காலத்துக்கு கொண்டு வந்து, நீண்டகாலத்துக்கு முன்னரே இறந்துவிட்ட கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்து நம்மிடைய உலவவிட்டிருக்கிறது இந்நூல். மகிழ்ச்சி, கோபம், வருத்தம், கவலை என அனைத்தும் கலந்து டேல்ரிம்பிளின் புத்தகம் ஆழமான உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்கிறது.
நன்றி – தினமணி
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.