மலர வேண்டும் மனிதநேயம்
‘மனித நேயம்’ என்பது பிறரை வாழ வைத்து தாமும் வாழ்வதே. “ஈயென இரத்தல் இழிந்ததன்று” “உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்” “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” “யாவருக்கும் உண்ணும்போது ஒரு கைப்பிடி” “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” “காக்கை-குருவி எங்கள் சாதி” “எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற பாடல் வரிகளின் மூலம் வள்ளலாரின் அருட்திறமும், பிற உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் பாரதியின் மனிதநேயப் பண்பும், எல்லா மக்களும் எல்லா நலமும் பெற்று வாழவேண்டும் என்ற கவிஞர் கண்ணதாசனின் பொதுவுடைமைச் சிந்தனையும் மனித நேய மாண்பிற்குச் சிறந்த உதாரணங்கள். தம்மைப் போலவே மற்ற மனிதர்களையும் சமமாகப் பார்த்து சாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என எவ்வித வேறுபாடுகளின்றி மக்களாகப் பிறந்த அனைவரையும் உயர்வு-தாழ்வு இன்றி சகோதர மனப்பான்மையுடன் அன்பு காட்டுவோம்.
Reviews
There are no reviews yet.