Marakkatha Mugankal
ஆளுமைகளை பத்திரிகைக்காக சந்தித்துவிட்டு அந்த வாரமே எழுதிக் கொடுத்து அது அச்சில் வந்தவுடன் சின்னதாக மகிழ்ச்சி. இவ்வளவுதான் ஒரு பத்திரிகையாளனின் வாழ்க்கை. பல ஆண்டுகள் கழித்து அந்த ஆளுமைகளின் சந்திப்புகளை அசை போடுகையில் ஞாபகத்தில் இருப்பவை மிகக் குறைவுதான். மணாவுக்கு தேவிகாவின் அழகிய சிரிப்பு, தங்கவேலுவின் குரல், எஸ்.ஆர். ஜானகி வீட்டில் எரியாத பல்பு, எம்.எஸ். தந்த ஆசீர்வாதம், எஸ்.எஸ்.ஆரின் கரகரத்த குரல், எம்.ஜி.ஆர். ஜமுக்காளம் விரித்து வெட்டவெளியில் போட்ட சாப்பாடு என பல ஞாபகங்கள் இருக்கின்றன. இந்த இனிய ஞாபகங்கள் ஊடாகப் பயணம் செய்து தமிழின் சிறந்த திரைத்துறை ஆளுமைகளை நம் கண்முன் சித்திரங்களாக வடித்துக் காட்டுகிறார். அவை மிக அழகாக இருக்கின்றன. அதில் அவர் பூசியிருக்கும் வண்ணங்கள் பிரகாசிக்கின்றன. சிவாஜி, மனோரமா, சோ என எல்லோருக்கும் மணாவின் பேனா தூரிகையில் இடம் இருக்கிறது.

கனம் கோர்ட்டாரே!
PIXEL 


Reviews
There are no reviews yet.