மர்லின் மன்றோ

Publisher:
Author:
(1 customer review)

157.00

மர்லின் மன்றோ

157.00

ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஹாலிவுட் திரைவானில் புகழின் உச்சத்தில் மின்னிய கவர்ச்சி நட்சத்திரம் மர்லின் மன்றோவின் வாழ்க்கை வரலாற்று நூல் இது.

1926 இல் பிறந்து, தனது 36 ஆவது வயதில் 1962 இல் அவர் மர்ம மரணம் அடைந்தது வரையிலும் விரிவாக விவரிக்கும் இந்நூல் ஒரு மர்ம நாவல் வாசிக்கும் அனுபவத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு சாதாரண குடும்பத்தில் நோர்மோ ஜீன் என்ற இயற்பெயரோடு பிறந்த மர்லின்,  ரேடியோ பிளேன் தொழிற்சாலை ஒன்றில் பணிப்பெண்ணாக வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களான ஃபாக்ஸ், கொலம்பியா ஆகியவற்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டு,  தொடக்கத்தில் பல படங்கள் தோல்வி அடைந்தபோதும் துவளாமல், வெற்றி நடிகையாக வலம் வந்த வரலாறு வியப்பை அளிக்கிறது.

மூன்று திருமணங்கள், அமெரிக்க அதிபர் கென்னடியுடன் நட்பு மற்றும் மர்லினோடு தொடர்பில் இருந்ததாகப் பேசப்பட்ட பிரபலங்கள் பலரும் இந்நூலில் உலா வருகிறார்கள்.

விலங்குகள் மீது அலாதிப் பிரியம் கொண்ட மர்லின் ஒருமுறை மழையில் நனைந்து கொண்டிருந்த மாட்டை வீட்டுக்கு அழைத்து வர முயன்றிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட கதாசிரியர் ஆர்தர் மில்லர் “மிஸ் ஃபிட்ஸ்’  படத்தின் ஒரு காட்சியாக அந்தச் சம்பவத்தை இடம் பெறச் செய்திருக்கிறார்.

நாய்களை வளர்ப்பதில் மர்லின் அதிகம் ஆர்வம் காட்டினார். அவரது மரணப் படுக்கையிலும் கூட அவருடைய வளர்ப்பு நாய் மெளன சாட்சியாக இருந்திருக்கிறது. “ஒருவர் வெற்றி பெறும்போது பலரின் பொறாமையையும் சேர்த்தே சம்பாதிக்கிறார். என்னுடய வெற்றி யாருடைய வெறுப்பையும் சம்பாதிக்கக் கூடாது என்று ஆசைப்படுகிறேன்’  என்பது போன்ற மர்லினின் அனுபவ மொழிகள் நூலில் நிறைந்துள்ளன. ஆண்டுவாரியாக அவர் நடித்த திரைப்படங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

திரையுலக ஆர்வலர்கள்விரும்பும் நூல்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பது நிச்சயம்.

– தினமணி

Delivery: Items will be delivered within 2-7 days