பொருளாதாரம் என்பது நிபுணர்களுக்கான துறை, நம்மால் அதைப் புரிந்துகொள்ளமுடியாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் நாம் அவசியம் தெரிந்துகொண்டாக வேண்டிய ஒரு துறை உண்டென்றால் அது இதுதான். காரணம் நம் வாழ்வோடு மிக நெருங்கிய, நம் வாழ்வை அடியோடு மாற்றியமைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு துறை பொருளாதாரைம்.
விவசாயம், வறட்சி, சமூக நலத் திட்டங்களின் எதிர்காலம். தொழில் வளர்ச்சி, தேக்கம், அந்நிய நேரடி முதலீடு, சிறப்புப் பொருளாதார மண்டலம், ஏழ்மை, வேலை வாய்ப்பு, போக்குவரத்து, நிதி என்று இந்தப் புத்தகம் அறிமுகப்படுத்தும் அனைத்துமே நம்மைப் பாதிக்கக்கூடியவை.
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என்று நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபிறகு மேற்கொண்ட முக்கியமான, சர்ச்சைக்குரிய பல பொருளாதார நடவடிக்கைகளையும் அவற்றின் விளைவுகளையும் இந்நூல் நடுநிலையோடு ஆராய்கிறது.
திகமலர் நாளிதழில் வெளிவந்த ஆர். வெங்கடேஷின் இந்தப் பொருளாதாரக் கட்டுரைகள் அனைத்துமே மாணவர்களை, பொது வாசகர்களை, சாமானியர்களை மனத்தில் வைத்து எழுதப்பட்டவை. அதனாலேயே இவை நேரடியாகவும் தெளிவாகவும் இருக்கின்றன. மோடியின் இந்நியாவைப் புரிந்துகொள்ள அரசியலை விடப் பொருளாதாரப் பார்வையே உதவும் என்பதை இந்தப் புத்தகத்தை வாசிக்கும் அனைவரும் உணரமுடியும்.

ரோலக்ஸ் வாட்ச்
கறுப்பு உடம்பு
எண் 7 போல் வளைபவர்கள்
பெரியார் - அடுக்குச்சொல் மற்றும் சில கட்டுரைகள்
பெரியார் - தேர்ந்தெடுக்கப்பட்ட சிந்தனைகள்
பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்
பறவைகள் நிரம்பிய முன்னிரவு
புனைவும் நினைவும்
அரைக்கணத்தின் புத்தகம்
கரப்பானியம் 
Reviews
There are no reviews yet.