முதுகுளத்தூர் படுகொலை – தமிழ்நாட்டில் ஜாதியும் தேர்தல் அரசியலும்

Publisher:
Author:
(2 customer reviews)

175.00

முதுகுளத்தூர் படுகொலை – தமிழ்நாட்டில் ஜாதியும் தேர்தல் அரசியலும்

175.00

1957 ஆம் ஆண்டு தென் தமிழகத்தின் இரு பெரும் ஜாதியினரான தேவர்களுக்கும், தேவேந்திரகுல வேளாளர்களுக்கும், இடையே ஜாதிய, மோதல் வெடித்தது. முத்துராமலிங்கத் தேவர் பதவி விலகலுக்குப் பிறகு நடக்கவிருந்த சட்டசபை இடைத்தேர்தல் இந்த வன்முறைக்கு தூண்டுகோலாக இருந்தது. மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்த அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர்களின் பிரதிநிதியாக இம்மானுவேல் சேகரன் இடம்பெற்றதை முத்துராமலிங்கத் தேவர் ஆட்சேபித்தார்.

மறுதினம் இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்டார். படுகொலையைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது ஐந்து தேவர்கள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர் வன்முறைச் சம்பவங்களுக்கு இட்டுச் சென்றது. முதுகுளத்தூர் கலவரம் என்ற பெயரில் பொது நினைவில் பதிந்து உள்ள இந்நிகழ்வு அவ்வப்போது தேவர்களாலும், தேவேந்திரகுல வேளாளர்களாலும் மீள் கவனம் கொள்ளப்படுகிறது.

தேவர்கள் அரசு வன்முறை என்பதாக நினைவு கூறுகின்றனர். தேவேந்திரகுல வேளாளர்கள் தங்களுக்கு எதிரான ஆதிக்க ஜாதி வன்முறை என்பதோடு தங்களுடைய வீரம் செறிந்த எதிர்ப்புப் போராட்டம் என்ற வகையிலும் நினைவு கூறுகின்றனர். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்த விரிவான முதல் ஆய்வு ‘முதுகுளத்தூர் படுகொலை’.

‘தமிழ்நாட்டின் இன்றைய அரசியல், சமூகச் சூழலைப் புரிந்து கொள்ள விரும்பும் எவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்’

ஆ.இரா.வேங்கடாசலபதி 

Delivery: Items will be delivered within 2-7 days