நெல்லை நகரில் கோயில் கொண்டிருக்கும் காந்திமதி அம்மையின் பேரில் அழகிய சொக்காநாத பிள்ளை பாடிய நூல் விளக்க உரையுடன்
96 வகை சிற்றிலக்கியங்களுள் பிள்ளைத்தமிழும் ஒன்று.இது தமிழில் மட்டுமே காணப்படக்குடிய ஓர் அற்புத இலக்கிய வகை. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய எழு பருவங்கள் இருபாலருக்கும் (ஆண்/பெண்) பொதுவானவை. அம்மானை, கழங்கு, ஊசல் ஆகிய பின் மூன்றும் பொன்பாற்பிள்ளைத் தமிழுக்கு உரியவை.
‘வடிவு’ என்றும் அழைக்கப்படும் காந்திமதியம்மையின் அழகு, அருளாற்றல், வீரதீரச் செயல்கள், திருவிளையாடல்கள், அருமை பெருமைகள், மூர்த்தி-தலம்-தீர்த்தம் ஆகியவற்றின் சிறப்பிகள் அனைத்தையம் விரித்துரைக்கிறது இப்பிள்ளைத் தமிழ். சொக்கநாதப் புலவர் புராணக்கதைகளையும் தலப்புராணச் செய்திகளையும் பெருமளவில் இவ்விலக்கியத்தில் கையாண்டுள்ளார்.
பழமை பதிப்புகளில் விடுப்பட்ட 100வது பாடலுக்கான சீர் கண்டறியப்பட்டு இப்பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. 59 ஆம் பாடல் திருத்தம் பெற்றதுடன், அனைத்து செய்யுள்களின் அடிகளும், சீர்களும் ஒழுங்குபட அமைக்கப்பட்டுள்ளன். பிள்ளைத் தமிழ் நூல்களில் குரு வணக்கம் காண்பது அரிது. ஆனால், இதிலுள்ள குரு வணக்கப் பாடலில் தமது தந்தையையே குருவாக வணங்கிப் பாடல் புனைத்திருப்பது அரிது.
அம்மை திருமாலுக்குத் தங்கை (38,62,86) என்பது பல் இடங்களில் கூறப்பட்டுள்ளன.அம்மை அம்மானை ஆடும்போது அவளுக்கிப் பணிவிடை(76) செய்வர்: அவள் ஊசல் ஆடும்போது ஊசலின் மணிக்கயிற்றைப் பிடித்து ஆட்டுவர்(93):அன்னை,பசுங்கிளிக்கு உணவு ஊட்டி இன்சொற்களை பயிற்றுவிக்கிறாள்(47): அபிராமப் பட்டருக்குத் தன் காதில் அணிந்த குழையை வீசி எறிந்து முழு நிலவை தோன்றச் செய்தாள்(39) முதலிய பல செய்திகள் கூறப்பட்டுள்ளன.
நாளிகேர பாகம், இட்சு பாகம்,கதலீ பாகம்,திராட்சா பாகம்,ஷீர பாகம்’ஆகிய பாடல்களின் ஐந்து தன்மைகளுள் 19-ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் வாழ்ந்த இப்பெரும் புலவரின் பாடல்களை திராட்சா பாகமாக (எளிதில் விளங்குவது) கொள்ளலாம்.
Reviews
There are no reviews yet.