Nizhalgal Nadantha Paathai
சிரிப்பு, துயரம், ரௌத்திரம், சோகம், ஆற்றாமை, கழிவிரக்கம் என மனதில் எல்லா உணர்ச்சிகளையும் கிளறிவிடும் சம்பவங்கள், நம் வாழ்வைச் சுற்றி தினமும் நிகழ்கின்றன. ஆனாலும், எல்லாவற்றையும் ஒரு பார்வையாளனின் மன நிலையிலேயே வேடிக்கை பார்த்துவிட்டுக் கடந்து போகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் மனக்குகையிலும் சிறிது வெளிச்சம் பரவச் செய்யும் முயற்சிதான் இந்த நூல். சமூக அவலங்கள் மீது சாட்டை சொடுக்கும் கட்டுரைகளையும், மனக் காயங்களை மயிலிறகால் வருடிவிடும் கட்டுரைகளையும் இதில் படிக்கலாம். டீக்கடை வாசல் முதல் டி.வி விவாதம் வரை அலசப்பட்ட பல பிரச்னைகளின் ஆழமான கோணங்களை இந்தக் கட்டுரைகளில் பார்க்கலாம்.
வாழ்க்கையில் கொண்டாடிய தருணங்கள், சோர்ந்து நின்ற சம்பவங்கள், தவிக்க விட்ட பிரச்னைகள் என எல்லாவற்றையும் தொட்டுச் செல்கிறார் மனுஷ்ய புத்திரன். படிக்கும் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏதோ ஒரு தருணத்தை மனக்கண்ணில் கொண்டுவந்து நிறுத்தி, அவர்களின் ஞாபகப் பெட்டகத்தைத் திறந்து வைக்கும் எழுத்து மனுஷ்ய புத்திரனுடையது. ‘குங்குமம்’ இதழில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற தொடர், பிறகு நூல் வடிவம் பெற்றிருக்கிறது. வெறும் எழுத்துகள் மட்டுமின்றி, புகழ்பெற்ற ஓவியர் மனோகரின் ஓவியங்களும் ஏராளமாக இடம்பெற்றிருப்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பு. தங்கள் புத்தக அலமாரியில் இந்த நூல் இருப்பதைப் பலரும் பெருமையாகக் கருதுகிறார்கள்.
Reviews
There are no reviews yet.