ஒற்றன்
அசோகமித்திரன்
அமெரிக்காவிலுள்ள அயோவர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புனைகதையுருவில் முன்வைக்கிறார். நிகழ்வுகளுடனும் அனுபவங்களுடனும் ஒன்றிப்போகாமல் மானசீகமாக விலகி நின்று பதிவு செய்யும் அசோகமித்திரனின் கலைப் பார்வை, தேர்ந்த காமிராக் கலைஞனின் நுணுக்கத்தோடு காட்சிகளைச் சித்திரிக்கவும் தவறுவதில்லை. பயணக்கட்டுரையும் புனைகதையும் சந்திக்கும் புள்ளியில் சஞ்சரிக்கும் இந்நாவலின் பிரதி நெடுகிலும் இழையோடும் அங்கதம் வாசிப்பில் சுவை கூட்டுகிறது. தமிழின் தனித்துவம் மிக்க கலைஞர்களில் ஒருவரான அசோகமித்திரனின் அலாதியான படைப்பாக்கங்களில் ஒன்று ‘ஒற்றன்’. நாவல் வடிவம் சார்ந்த பரிசோதனையில் முன்னோடி முயற்சிகளில் ஒன்றான ‘ஒற்றன்’ முதன் முறையாக அதன் முழுமையான வடிவில் வெளிவருகிறது.

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்
சொலவடைகளும் சொன்னவர்களும்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
சிலிங்
பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)
கற்றுக்கொடுக்கிறது மரம்
மண் குடிசை
உடைந்த நிழல்
On The Origin Of Species
பாரதிதாசனும் நகரத்தூதனும்
திண்ணை வைத்த வீடு
கோடை மழையின் முதல் துளிகள்
சாதனையை நோக்கிய பயணம் 


Reviews
There are no reviews yet.