நாட்டுப் பற்றுடைய, கிரிக்கெட் விளையாட்டில் உலகின் பல சாதனைகளை முறியடித்து இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிற ஒரு சாதனையாளனின் வாழ்க்கை வரலாறு இந்நூல். செக்கச் சிவந்த நிறத்தில் பறந்து வருவது பந்தா அல்லது நெருப்பு உருண்டையா என்று ஐயப்படும் வகையில் இம்ரான்கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் ஆகியோர் பந்துகளை எறிந்து கொண்டிருந்தனர். வக்காரிடம் இருந்து வந்த பந்து எதிர்பாராத நேரத்தில் மூக்கில் வந்து வேகமாகத் தாக்க சச்சின் நிலை தடுமாறினான். பலமான அடி என்பதால் மூக்கில் இருந்து ரத்தம் ஒழுக சச்சின் கீழே விழுந்தான். உதிரம் சொட்டச் சொட்ட நிற்கும் ஆட்டைச் சுற்றி ரத்த வெறி பிடித்த ஓநாய்க் கூட்டம் நின்று ரசிப்பது போன்று பாகிஸ்தான் அணியினர் சச்சினைச் சுற்றி நின்றிருந்தனர். பாகிஸ்தான் ரசிகர்களோ எங்களுக்கு இந்த ரத்தம் போதாது. இன்னும் வேண்டும் என்று கூறுவதுபோல் கரகோஷம் எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். .ஸ்ட்ரெச்சர் எடுத்து வரப்பட்டது. சச்சின் எதற்கும் கவலைப்படவில்லை. மருத்துவர் முதலுதவி அளித்துப் பெவிலியனுக்குத் திரும்ப ஆலோசனை கூற, ஸ்ரீகாந்தும் அதை ஆமோதித்தார். ஆனால், சச்சின் விடாப்பிடியாக விளையாடியே தீருவேன் என்று உறுதியாகக் கூறினான். கைக்குட்டையால் மூக்கைச் சுற்றிச் சிறிய கட்டுப் போட்டுக் கொண்டு ‘ஐ ஆம் ஆல் ரைட், ஐ கேன் ப்ளே’ என்றான். வக்கார் வீசிய வேகமான அடுத்த பந்தை லாவகமாக ஸ்குயர் டிரைவ் செய்து பவுண்டரிக்கு அடித்தான். அடுத்த பந்தையும் கவர் ஃபீல்டு பகுதிக்குப் பவுண்டரியாக அடித்தான். சச்சின் அடிபட்டதும் கரகோஷம் செய்து மகிழ்ந்த பாகிஸ்தான் ரசிகர்கள் அடுத்தடுத்த பந்துகளை அவன் விளாசித் தள்ளியதைப் பார்த்து வாய் மூடி மவுனிகளாயினர்.
சச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்
Publisher: சிக்ஸ்த் சென்ஸ் Author: கே.ரமேஷ்₹250.00
நாட்டுப் பற்றுடைய, கிரிக்கெட் விளையாட்டில் உலகின் பல சாதனைகளை முறியடித்து இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிற ஒரு சாதனையாளனின் வாழ்க்கை வரலாறு இந்நூல்.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.