சடங்கில் கரைந்த கலைகள்

Publisher:
Author:

215.00

5 in stock

சடங்கில் கரைந்த கலைகள்

215.00

ஒருபக்கம் நாட்டார் நிகழ்த்துகலைகளை அழிய விடாமல் இன்றளவும் பாதுகாக்கும் பணியைக் கோவில் சடங்குகள் செய்துவருகின்றன. மற்றொரு பக்கம் அவற்றை யந்திரகதியிலான நிகழ்த்துதலாக்கி வளர்ச்சியும் மாறுதல்களும் உருவாகாமல் தடுத்துத் தேக்கநிலையில் வைத்துள்ளன. இதைத்தான் ‘சடங்கில் கரைந்த கலைகள்’ என்கிறார் நூலாசிரியர். 

ஆழமான கள ஆய்வு, கிடைத்த தரவுகளை முறைப்படுத்துதல், கலைஞர்கள் மீதான பரிவுணர்வு, சமூகமாறுதல்கள் இக்கலைஞர்களின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்த பதிவுகள், பொருத்தமான முறையில் இடம்பெறும் நூற்செய்திகள் ஆகியன இந்நூலின் சிறப்புக்குத் துணை நிற்கின்றன. 

தமிழ்நாட்டின் வட்டார வரலாற்றை முறையாக வெளிக்கொணர இத்தகைய முயற்சிகள்தாம் துணைநிற்கும். தமிழ்நாட்டின் சமூகப் பண்பாட்டு வரலாற்றை முழுமையாக எழுத இவை புறக்கணிக்க இயலாத ஆவணங்களாக அமையும்.

– பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்

Delivery: Items will be delivered within 2-7 days