THADAM PATHITTHA THAARAKAIKAL
கடந்த சில நூறு ஆண்டுகளில் பெண்கள் குறிப்பிடத்தக்க வகையில் என்ன செய்திருக்கிறார்கள்? இந்த ஆவலில் உருவானதுதான் இந்தத் தேடல். இதில் இடம்பெற்றுள்ள பெண்கள் பல்துறை வித்தகர்களாக இருக்கிறார்கள். விஞ்ஞானியாக இருந்தாலும் சரி, நடிகையாக இருந்தாலும் சரி, ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்தாலும் சரி… அவர்களிடம் சமூக முன்னேற்றத்துக்கான நோக்கமும் செயல்பாடுகளும் இருந்தன. சாதாரணமான பெண்கள் கூட, வாய்ப்பு கிடைக்கும்போது சாதனையாளர்களாக மாறியிருக்கிறார்கள்.
உலகின் முதல் பெண் மருத்துவரும் பெண் கல்விக்காகப் பாடுபட்டவருமான எலிஸபெத் ப்ளாக்வெல்… பெண் வரலாற்று ஆசிரியரும் பெண்கள் வரலாற்றுத் துறையைத் தோற்றுவித்தவருமான கெர்டா லேர்னர்… ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களைத் தன் எழுத்து மூலம் வெளிப்படுத்தியவரும் நோபல் பரிசு பெற்றவருமான நதின் கார்டிமர்… சிறந்த நடிகையும் கண்டுபிடிப்பாளருமான ஹெடி லாமர்… உலகின் அதிவேகப் பெண்ணான வில்மா ருடால்ஃப்… 86 வயதில் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையாக மாறிய ஜோஹன்னா க்வாஸ்… இப்படி வரலாற்றில் புதிய தடம் பதித்த வித்தியாசமான 34 பெண்களைப் பற்றிய அறிமுகமே இந்த நூல்.

ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை
மும்மூர்த்திகள்: ஜெயமோகன் – யுவன் சந்திரசேகர் – பெருமாள்முருகன் 
Reviews
There are no reviews yet.