Velaikku Welcome
நேர்முகத் தேர்வுக்கு வழி காட்டும் புத்தகங்கள் நிறையவே வந்திருக்கலாம். ஆனால், இந்தப் புத்தகம் வேறு மாதிரி. நிச்சயம் இதுநாள் வரையில் இல்லாததொரு நுட்பமான பதிவை இதன் பக்கங்களில் நீங்கள் தரிசிக்கலாம். இன்றைய உலகம் ஒரு பிரமாண்ட பாம்பு போல வருடத்துக்கொருமுறை சட்டை உரித்து, புத்தம் புதிதாகிவிடுகிறது. காரணம், தொழில்நுட்பம். எல்லா துறைகளையும் அது புரட்டிப் போடுகிறது. நம் வாழ்வின் அன்றாட நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் தொழில்நுட்பம் பாதிக்கிறது. ஷாப்பிங், ஹோட்டல், ரயில் டிக்கெட்… எதுவுமே இப்போது முன் போல் இல்லை. பல மாற்றங்கள் கண்டு எங்கோ வந்து நிற்கின்றன.
இன்டர்வியூ மட்டும் அப்படியே இருக்குமா என்ன?
போன் இன்டர்வியூ, ஸ்கைப் இன்டர்வியூ, லன்ச் இன்டர்வியூ என இந்தக் கால நேர்முகத் தேர்வுகளின் நவீனப் போக்குகளை இந்தப் புத்தகம் பேசுகிறது. இன்டர்வியூ சமயத்தில் உங்கள் டயட்டில் தொடங்கி உடைகள் வரை எப்படி எப்படி இருக்க வேண்டும் என்ற உளவியல் வழிகாட்டுதலை இதில் பெறலாம். வெறும் நேர்முகத் தேர்வு என்று மட்டும் நின்றுவிடாமல், இன்றைய இளைஞனின் வெற்றிக்கு தடைக்கற்களாக நிற்கும் அனைத்தையும் அடையாளம் கண்டு பல கோணங்களில் அதை அலசுகிறது இந்தப் புத்தகம். பேசப் புகும் சங்கதி எதுவோ அதற்கு ஏற்ற நிபுணர்களைத் தேடி, ஆலோசனைகளைப் பெற்று, அதை எளிய நடையில் இங்குத் தொகுத்துத் தந்திருக்கிறார் கோகுலவாச நவநீதன்.
வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கும் நமது, ‘குங்குமச்சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி’ இதழில் வெளிவந்து, பெரும் வரவேற்பை பெற்ற தொடரே புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. வேலை தேடும் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் மட்டுமல்லாது, தங்கள் பணியையும் வாழ்வையும் அடுத்த தளத்துக்கு உயர்த்த நினைக்கும் அனைவருக்குமே இந்தப் புத்தகம் ஒரு Must Have கைடு எனலாம்!.

 புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்						 நெஞ்சம் திண்டாடுதே
நெஞ்சம் திண்டாடுதே						 சந்திரஹாரம்
சந்திரஹாரம்						 The Great Scientist of India
The Great Scientist of India						 விதியின் சிறையில் மாவீரன்
விதியின் சிறையில் மாவீரன்						 வெ. சாமிநாத சர்மா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வெ. சாமிநாத சர்மா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 தோகை மயில்
தோகை மயில்						 உலகிற்கு சீனா ஏன் தேவை
உலகிற்கு சீனா ஏன் தேவை						 இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்						 திருக்குறள் ஆராய்ச்சி
திருக்குறள் ஆராய்ச்சி						 மத்தவிலாசப் பிரகசனம்
மத்தவிலாசப் பிரகசனம்						 சந்திரகிரி ஆற்றங்கரையில்
சந்திரகிரி ஆற்றங்கரையில்						 சிரஞ்சீவி
சிரஞ்சீவி						 சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)						 நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்						 சன்னத்தூறல்
சன்னத்தூறல்						 சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை						 Book of Quotations
Book of Quotations						 இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்						 காதல்
காதல்						
Reviews
There are no reviews yet.