வேள்பாரி – சு.வெங்கடேசன்
தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்பு நாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது. பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது. இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்…
Mubarak –
ஆசிரியர் #சு_வெங்கடேசன் அவர்களின் #வேள்பாரி.
நண்பர்கள் பலரும் சொல்லி பாரியின் பறம்பு பற்றிய சிறு அறிவு இருந்தது. ஆனால் அவர்கள் சொல்லியது எல்லாம் சிறு துரும்பு அளவு தான் என புத்தகம் வாசித்த பின் தான் தெரிகிறது.
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, கபிலருக்கு தோள் கொடுத்தான் பாரி என்பதை தாண்டி எதுவும் தெரியாது அதிலும் கபிலருக்கு தோள் கொடுத்து அவர்களின் தோழமையை கூறுவது என்று நினைத்தேன். ஆனால் பாரி கொடுத்த தோள் எதுவென கதை படித்த போது தான் தெரிந்தது.
மலை மக்களின் காதல், வீரம், கொடை, அறநெறி என எல்லாவற்றையும் அழகாக வடித்திருக்கிறார் ஆசிரியர். வழித்தடத்திற்காக கூட இயற்கையை அழிக்காமல், மிருகங்களின் தடத்தை பயன்படுத்துவதிலேயே அவர்களின் குணத்தை அறிய முடிகிறது. புனைவு கலந்த நாவலானாலும் எது புனைவு, எது உண்மை என பிரித்தறிவது கடினம். அதுவே இப்புத்தகத்தின் மாபெரும் வெற்றி.
ஆதினி அதிகளவில் கதையில் இல்லாவிட்டாலும் சிறு இடங்களிலேயே நிலைத்து விட்டார்.
அங்கவை, உதிரன் காதலும், சோமபூண்டு பானம் குடிக்கும்போது அவர்களின் குறும்பான பேச்சும் அழகாகவே இருந்தது.
நீலன், மயிலா காதல் கதை அருமை. ஆரம்பம் முதல் பயணிக்கும் நீலன் மலைச்சரிவில் சண்டையிட்ட காட்சிகள் மெய்சிலிர்ப்பவை.
தேக்கன், முடியன், இராவதன் என முக்கிய போர் கதாப்பாத்திரங்களின் போக்குகள் எல்லாம் வீரம் ஊறியவை.
திசைவேழாரும், கபிலரும் அறிவின் ஊற்று. முறியன் ஆசான் என்னும் மருத்துவர் இறுதியில் வந்தாலும் அறிமுகமே அவர் திறமையை சொல்லிவிட்டது.
முதல் போர் காட்சியில் பாரி சோழர்களை ஓடவிட்டது சிறந்த போர் உத்தியின் வெளிப்பாடு. இறுதி போர்க்காட்சிகள் கதை முடிந்தும் மனக்கண்ணில் ஓடிக் கொண்டே இருக்கிறது.
கூத்து, பாணம் என மற்றொரு பக்கம் கொண்டாட்டங்களுக்கு அளவில்லை.
பாரியின் காடு குறித்த அறிவும், புரிதலும், தேக்கனின் சிந்தனைகளும், இடையிடையே வந்த வள்ளி, முருகன் கதைகளும் சிறப்பாகவே இருந்தது.
பாரி, கபிலரின் நட்பு சொல்லவே வேண்டாம். நண்பனின் மரணத்தை அடுத்து கபிலர் உண்ணாமல் இருந்து உயிர் துறந்தவர்னு நாம படிச்சது தான். அந்த நட்பை கதையிலும் சிறப்பாகவே சொல்லியிருக்காங்க.
மொத்தத்தில் வேள்பாரி பறம்பிலிருந்து இறங்கவிடாமல் இன்னும் ஒரு மாதமாவது என்னை பிடித்து வைத்துக்கொள்வான்.
-நன்றி
#Muba
Ramalakshmi –
கல்கி மற்றும் சாண்டில்யனின் வரலாற்று புத்தகங்களை மட்டுமே படித்திருந்த எனக்கு சு.வெங்கடேசன் அவர்களின் உரைநடை புதிய சுவையாக உள்ளது.
என்னக்கு புரிந்த வேள்பாரி :
முதல் பக்கத்திலிருந்தே தொடங்கிய பிரமிப்பு…
ஒவொரு வரிகளிலும் ஒரு வாழ்வியல் ஒரு அரசியல் ஒரு அழகியல் …
இயற்க்கையின் கொடை மற்றும் அதன் பிரமாண்டம் …
தலைவனின் பண்புகள் …
குடிகளின் கடமைகள் …
நட்பின் உயர்த்துவம் …
காதலின் பரிமாணங்கள் …
எத்தனையோ கதாபாத்திரங்கள் இருந்தும் மனம் தேடியதும் நாடியதும் பாரியைத் தான்.
பச்சை மலைக்குள் நுழைந்த கணத்திலேருந்தே வியந்ததும் பாடம் கற்கத் தொடங்கியதும் கபிலர் மட்டுமல்ல!
முருகன் வள்ளி காதல் கதையில் சாட்சியாக நாணம் கொண்டது எவ்வி மட்டுமல்ல!
தேவாவாக்கு விலங்கினை மீட்க திரையர்களின் பின்னால் ஓடியது தேக்கனும் மாணவர்களும் மட்டுமே, நான் அல்ல என்று பொய்யுரைக்க அவசியம் இல்லை!
வைப்பூர் நெருப்பின் சூட்சும பக்கங்களை எத்தனை முறை வாசித்தும் வியப்பு நீங்கவில்லை!
“செடி, கொடி, புல், பூச்சி, வண்டு, காற்று, கல்,மண்,காட்டெருமை இதெல்லாம் வெச்சி கூடவா போர் நடத்துவாய்ங்க” என்று எண்ணமால் இருக்க இயலவில்லை….
நாவல் பழத்துல இத்தனை ரகங்கள் ஒருபக்கம் இருக்கட்டும் அத சாப்பிடுறதுக்கு ஒரு வாய்ப்பாடு சூத்திரம் வெச்சிருக்காய்ங்களா…
அது சரி, வான் வெளியில் நட்சத்திரங்களை வழி அடையாளமா வெச்சிகிட்டவங்களுக்கு நாவல் பழ சூத்திரம் பெரும் கஷ்டமா என்ன….
“மான்கறி, காட்டெருமை விருந்து, மது, காதல், கூத்து, சோமபாணம் கொண்டாட்டம் னு எம்புட்டு சந்தோசமா வாழ்துருக்காய்ங்க” இப்பிடி பொறாமையும் வருது…
“என்னாது தேன் கட்டியை சாப்பாடா சாப்பிட்டாங்களா !?!?” இதுக்காவாச்சும் அந்த காலத்துக்குள்ள போகணும்னு ஆசை வருது…
“இதுதான் வாழ்க்கை”, “அழிப்பதை மட்டும் செய்யும் எந்த ஒரு உயிரையும் காடு வாழ விடாது”, “விதையை நடாதவனுக்கு கிளையை பறிக்கும் உரிமை இல்லை”, “கலப்பில் தானே புதுமைகள் உண்டாகும்” – எவ்வளவு ஆழமான அரசியல்.
“மனசுல பெரிய பாரி வள்ளல் னு நெனப்பு…அள்ளி அள்ளி கொடுக்குறார்” இந்த டயலாக் எங்க ஊருல இப்போவும் கேட்கலாம். இது ஏன் இத்தனை ஆண்டுகள் கழிந்தும் நடைமுறையில் உள்ளது என வேள்பாரி விளக்கிற்று.
“final destination” படம் பார்த்தபின் சில நாட்கள்/வாரங்களுக்கு, தலைக்கி மேல சுத்துற மின்விசிறி, முன்னாடி போய்ட்டுருக்கும் loaded truck பாக்குறப்போ ஒரு பயம், கற்பனை வரும் அதுபோல வேள்பாரி படிச்சா, வீட்டுக்குள்ள கொஞ்சம் பெரிய சைஸ் ல பறக்குற “ஈ” கூட பயங்கரமா தெரியும். படிச்சி பாருங்க, கற்பனைகளுக்கும் அப்பாற்பட்ட இடத்திற்க்கு அழைத்து செல்லும்.
நன்றி.
Sumi Hari –
குறுநில மன்னன் பாரி-முல்லைக்கு தன் தேரினைக் கொடுத்தான் என்பதைத் தவிர வேறொன்றுமே தெரியாமல்தான் வாசிப்பைத் தொடங்கினேன்.கடந்த ஒருமாதத்தில் இருமுறை வாசித்தபின்தான் இந்தப்பதிவு.
தம் குடிமக்களின் மேல் அவன் கொண்ட அன்பும் அக்கறையும் மலைக்க வைக்கும்.ஒவ்வொரு வரியிலும் கொட்டிக்கிடக்கும் தகவல்களும்,ஆச்சரியமும்.நம்மை பறம்பை விட்டு வெளியேற முடியாமல் செய்துவிடும்.
கபிலர்,நீலன்,தேக்கன்,திசைவேழர்,பொற்சுவை,மயிலா,உதிரன்,மையூர்கிழார்,இன்னும் நிறைய பாத்திரங்கள் மனதை விட்டு மறையாது.
ஏழிலைப்பாலை,குறிச்சிப்பூ,வெண்சாரை,காக்காய்விரிச்சி,தோகைநாய்கள்,கருங்கிளி,கருநெல்லி என எவ்வளவோ ..காட்டைக் கண்முன்னே நிறுத்தும்.போரை இவ்வளவு தத்ரூபமாக வேறெதிலும் வாசித்ததாய் நினைவில்லை.
பறம்பின் தாக்கம் வாசித்து முடித்தபின்னும் பலநாள் தொடரும்.
KRISHNAKUMAR K –
மனிதன் இயற்க்கையை காக்க விரும்பினால் வேல்பாரியேய் படித்தாலே போதும்.
பாரி அரசன் அல்ல குலத்தலைவன். சூளிவேல் தூதுவையின் மகன். திரையர் குல மகள் தூதுவை காட்டெருமையை அடக்கி ஆளும் குல மக்கள்.
பாரி மனைவி ஆதினி. அங்கவை சங்கவை மகள்கள்.
அங்கவை உதிரனை நாகர் குலம் சார்ந்த காதல் செய்கிறாள்.
நீலன் மயிலா காதல் ஜோடிகள் சோம பூண்டு பணத்திற்கு போட்டி போடும் யுக்தி.
வள்ளி முருகன் பரண்மேல் காதல். எவ்வி பெற்ற சோமபூண்டு முருகனிடமிருந்து.
பழையன் பழைச்சி
வாரிக்காயன்
வேட்டூர் பழையன்
காடரியும் ஆசான் தேக்கன்.
முடியன், மகன் இராவதன்.
நாகர்குலம்
திரையர் குலம். காலம்பன்.. வீரம்.
செம்பா. மாட்டு மந்தை. மூலிகை சாறு. சோழன்
நாவல் பழ சுவை வாழ்வியல் அழகுகள்.
கபிலர் பொறாமை பாரி மீது. கண்டறிய பச்சை மலையிலுள்ள பறம்பு நாடு புறப்படுதல்.
நீண்ட பயணம் நீலனோடு.
காக்காவிரிச்சி கொடூர பறவை.. மூலிகை அறிதல். மயக்கம்.
பாரி, கபிலரை உபசரிப்பு. கபிலர்க்கு அறுபதாங்கோழி.
சோமப்பூண்டு பானம்.
தேங்கல். மான் கறி. காட்டெருமை கறி. பன்றி கறி.
நாம் வாழாமல் விட்டு விட்டோமே பறம்பு நாட்டில் என பொறாமை எனக்கு.
கொற்றவைக்கூத்து.
கொற்றவை மரம்
பாணர்கள் கூத்து.
தேவ வாக்கு விலங்கு.
உப்பரை. எவ்வியூர். ஆதினி பாரி காதல். ஆதினி. மூலிகை ராணி. அங்கவை காதல் வசப்படுதல். கார துவையலும் நாவல் பழமும்.
கூழ். கேலி. கிண்டல்.
குலப்பாடல். குல கூத்து.
குல நாகினிகள்.
அணையா விளக்கு மழையிலும்
விஷ பூச்சி அண்டா விளக்கு
சேர நாட்டு போர். செம்மஞ்சேரல் தலை வெட்டு.
உதயசேரல் பலி வாங்கும் நோக்கு.
மூவேந்தர் படையெடுப்பு. தோல்விகளும்.
வானியல் திசைவேழர்
ஆசான்.
குலசேகரப்பாண்டியன்
பொதியவெற்பன். பொற்சுவை
சுகமதி
இளமாறன். மையூர் கிழார். வெங்கல் நாடு.
கருங்காளி. காமன் சிலை..
நாகம் மரகத கள்ளை உமிழ்தல்.
கருங்கிளி.
தோகை நாய்.
ஏரி மத யானை.
அட்டை பூச்சிகள்.
அனலி பூச்சிகள்.
தட்டியாமங் காட்டு போர் பாழ் நிலம்.
கருங்கைவாணன். உதயன் சேரல் தலை துண்டிப்பு.
ஈங்கையன் துரோகம்.
பொற்சுவை.இராவணன். தேக்கன். திசை வெழர் தியாகம்.
நன்றி பாராட்டுதல் போர் தெய்வத்திற்கு.