….நேரில் சரளமாக உரையாடுகிறவர்களின் எழுத்திலும் அப்படி உரையாடல்கள் சரளமாகவும் கச்சிதமாகவும் அமைந்துவிடும் என்று. தி.ஜானகிராமன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில் நாடன், பாலகுமாரன், இமையம், பாரதி பாலன் வாசிக்கிற போது அது உண்மைதான் என்று நினைத்துக் கொள்வேன். ஆனந்தனைப் பொறுத்தவரையிலும் கூட, நூறு சதவிகிதம் சரி. அவருடைய கலகலப்பான நேர் உரையாடல்களையும் விடவும் வசீகரமானவை, உணர்வுபூர்வமானவை, ஒரு திரைப்படக் காட்சிக்கு மிகப் பொருந்துகிறவை அவருடைய கதைக்குள் நிகழும் உரையாடல்கள்.
….ஓவியனைத் தனக்குள் ஒளித்துவைத்திராத எழுத்தாளன் உண்டா? ஆனந்தனிடம் இருக்கிற ஓவியனை அவருடைய விவரணைகளில் கண்டுபிடித்து விடலாம். ஆட்களையும் இடங்களையும் அப்படியே வரைந்துவிட முடிகிறது அவருக்கு. எல்லாவற்றையும் அவர் தேர்ந்த நீர் வண்ணச் சித்திரமாக்கி விடுகிறார். தைல வண்ணங்களை விட, சில நீர் வண்ணங்களில் எப்போதுமே அப்படி ஒரு கனவின் மாயம்.
– வண்ணதாசன்

மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)
1777 அறிவியல் பொது அறிவு 

Reviews
There are no reviews yet.