YAARUME THADUKALA
தமிழ்நாட்டின் அவமானமாக சாதிய வன்மத்தின் வெளிப்பாடாக நிகழ்ந்த கொலைகளில் சில வற்றை ஆவணப் படுத்தி உள்ள மிக முக்கியமான நூல்.சம்பவம் குறித்த தகவல்கள், கள் ஆய்வில் கண்டறிந்து தகவல்கள், பரிந்துரைகள் என்று ஒவ்வொரு பயங்கரச் செயலும் விவரிக்கப்பட்டுள்ளது.உயர் கல்வியில் சமூகப் பணி (Social Work) படிப்பை மேற்கொள்ளும் ஒவ்வொரும் வாசிக்க வேண்டிய ஆவணம்.சமூகப் பணித் துறை நூலகங்களில் (Social Work Department Library) இந்த நூல் அவசியம் இடம் பெற வேண்டும்.ஓரு ஆய்வு மாணவருக்கும் தேவையான அடிப்படை செய்திகளையும், சிக்கலைக் குறித்த புரிதலையும் இந்த நூல் தருகிறது.சரியான காலத்தில், மிகவும் சிறப்பாக இந்த நூலைத் தொகுத்துள்ள தோழர் வ. ரமணி அவர்களுக்கும், நூலின் அவசியத்தை உணர்ந்து மிகவும் நேர்த்தியாக வடிவமைத்து வெளியிட்டுள்ள சிந்தன் புக்ஸ் நிறுவனத்திற்கும் பாராட்டுகள்.மகிழ்ச்சியும் வாழ்த்தும்.
Reviews
There are no reviews yet.