ஊரும் சேரியும்:
சித்தலிங்கையாவின் சுயசரிதையில் தலித் எழுத்தாளர்களின் படைப்புகளில் நாம் எதிர்பார்க்கக்கூடிய அநேக அம்சங்களிருக்கின்றன. வறுமை, கோபம், அவமானம் அனைத்தும் இருக்கின்றன. ஆனால் மொத்தப் படைப்பின் ஊடே ஒரு புதிய, எதிர்பாராத, முக்கிய அம்சமொன்றும் இருக்கிறது. அது வறுமை மற்றும் கொடுமையைப் பற்றிய பயமின்மை. இப்புத்தகத்தின் கரு தலித் படைப்புகளில் பொதுவாக நிலவக்கூடிய கருதான். ஆனால் இக்கருவைக் கையாளும்முறை மிகவும் வேறுபட்டது. புத்தெழுச்சி தரக்கூடியது என்றும் சொல்லலாம். வறுமை, சாதி, அவமானம், பயம் ஆகியவை இல்லாத தலித் கதை என்பது பொய்யானது. ஆனால் அவற்றை ஓர் எழுத்தாளன் ஆற்றலோடு எதிர்கொண்டு வெல்கிறான் என்பது உண்மை. தம் வாழ்வின் பசி, அவமானங்களைத் தனக்குகந்த முறையில் கையாள்வதன் வழியாக கவிஞரான சித்தலிங்கையா அவற்றைத் தாண்டும் வழிமுறைகளையும் காட்டுகிறார்.
டி.ஆர்.நாகராஜ்
Reviews
There are no reviews yet.