1 review for தேவாரம்: ஒரு புதிய பார்வை
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹150.00.₹140.00Current price is: ₹140.00.
தேவாரப் பாடல்களை ஏதோ கோயில்களில் கருவறையில் அர்ச்சகர்கள் சமஸ்கிருத மந்திரங்கள் சொல்லிய பின்னர், கருவறைக்கு வெளியே, அர்த்த மண்டபத்தைத் தாண்டி கோயிலில் ஒதுக்கப்பட்ட ஓதுவார்கள், ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்று பக்தர்கள் எல்லாம் ‘சுவாமி தரிசனம்’ முடிந்து நகரும் நேரத்தில் பாடப்படுபவை என்று நினைப்பது வரலாற்றைப் பார்க்க மறுக்கும் பிழையாகும். பக்தி இலக்கியங்கள் அக்காலக் கண்ணாடியாகும். எனவே பக்தி இலக்கியங்களை வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்.
Delivery: Items will be delivered within 2-7 days
ART Nagarajan –
தேவாரம்
“ஒரு புதிய பார்வை”
சிகரம்.ச. செந்தில்நாதன்
சந்தியா பதிப்பகம்.
தேவாரப் பாடல்களை கோயில்களின்
கருவறையில் பாட அனுமதிப்பதில்லையே ஏன்?
அர்ச்சகர்கள்
சமஸ்கிருத மந்திரங்கள் சொல்லிய பின்னர்,
கருவறைக்கு வெளியே,
அர்த்த மண்டபத்தை
தாண்டி, கோயிலால்
ஓதுவார்களுக்கு
ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்றுகொண்டு
பக்தர்கள் எல்லாம்
“சுவாமி தரிசனம்” முடிந்து வெளியேறும் நேரத்தில்
பாடப்படுவது ஏன்?
தேவாரம் பாடிய மூவரான திருஞான சம்பந்தர்,
திருநாவுக்கரசர்,
மற்றும் சுந்தரர் பற்றி
விரிவாகப் பேசுகிறது இந்த நூல்,
திராவிட இயக்கம்
தோன்றுவதற்கு
பல்வேறு காரணங்கள் இருந்தாலும், வடமொழிக்கு எதிரான தமிழ் மொழியும்,
வேதாந்தத்தை மறுத்த சித்தாந்தமும் அடித்தளமாக அமைந்ததற்கான காரணத்தை
யாரும் புறந்தள்ள முடியாது என்கிறார் ஆசிரியர்.
கருவறைக்குள் தமிழ் நுழையக்கூடாது,
அர்ச்சனை,
அபிஷேகங்கள் செய்ய
மற்ற சாதிகள் கருவறைக்குள்
கால் பதிக்கக் கூடாது,
என்ற தீண்டாமைக்கு
எதிரான ஜனநாயகக் குரல், வேத மதத்திற்கு எதிராக ஒலிக்கத் துவங்கியது.
ஒடுக்கப்பட்ட மொழிக்கும், மக்களுக்கும்
ஆதரவான
ஒரு ஜனநாயக போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல,
சைவ மதம்
இதர ஜனநாயக அமைப்புகளோடு ஒன்றுபட்டு நிற்பதை மிகவும் நுட்பமாக
இந்த நூலில் தெளிவு படுத்துகிறார்!
போராட்டத்திற்கான
கருவிகளாக சைவமதம்
“தேவாரம்”
“திருவாசகம்” திருமுறைகளை
பயன் படுத்தின!
வடமொழி தான்
அர்ச்சனை மொழிஎன்றால்,
தமிழ்மொழியில்
நாம் காட்டுவது
தேவாரம், திருவாசகம் போன்ற
திருமுறைகள் தான்!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்றால் சைவமதம் காட்டுவது
அனைத்து சாதியினரும்
அணி வகுத்து நிற்கும் நாயன்மார்கள் கூட்டத்தைத் தான்!
வடமொழி வேதாந்த மரபை தூக்கி தோளில் வைத்துக்கொண்டு ஆடுகின்ற சக்திகளுக்கு எதிராக போராடும் கருவிகளானது தேவாரமும், திருவாசகமும்.
சமண, பெளத்த மதங்களோடு,
வைணவ மதத்தையும்
எதிர் கொண்டது
சைவ மதம்.
தேவாரம், திருவாசகம் தவிர இதர திருமுறைகளையும்,
திவ்ய
பிரபந்தங்களையும்
எப்படிப் பார்ப்பது
என்ற கேள்விக்கு
நூலாசிரியர் விளக்குகிறார்.
மனித குலம் எப்படி வளர்ச்சியுறும் என்று
சமூக விஞ்ஞானம் சொல்கிறதோ,
அதனடிப்படையில்
தமிழ்ச் சமூக வரலாற்றை பார்க்கும்போது
“தேவாரம்” என்பது
நிலவுடமைச் சமூகம் வளர்ந்தோங்கிய காலத்தின் கைக் கண்ணாடி!
தேவாரம் காட்டும் சமூக வளர்ச்சியின் தொடர்ச்சியே நம் கால கட்டம்.
நேற்றைய வரலாற்றின் தொடர்ச்சியே
இன்றைய வரலாறு!
நேற்றைய வரலாற்றையும், இன்றைய வரலாற்றையும் புரிந்துகொண்டு நாளைய வரலாற்றை எழுதுவதற்கு உதவுகிறது இந்த நூல்.
தமிழகத்தின், மற்றும் தமிழ்ச் சமூகத்தின் புராணீக வரலாற்றை
சைவ மதம் எப்படி எதிர் கொண்டு தன்னை தகவமைத்துக் கொண்டது என்பதை இந்த நூல் விரிவாக நம்மோடு பேசுகிறது.
தமிழர்கள் அனைவரும்
அரிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டிய நூல்.
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART.நாகராஜன்
வாசகர் வட்டம் மதுரை
05.04.2020.