முன்பெல்லாம் குடும்ப டாக்டர் என்றொருவர் இருந்தார். தாத்தா முதல் குழந்தை வரை ஒரு வ் யாருக்கு எதுவென்றாலும் போன் செய்தால் போதும், பெட்டியோடு வீட்டுக்கே ஓடி வந்துவிடுவார். வந்தவுடன் ஊசி, மாத்திரை என்று தாவிவிடாமல் சில நிமிடங்களாவது சிநேகத்தோடு வீட்டு விஷயங்களைப் பேசுவார். உடம்புக்கு என்ன ஆச்சு என்று கனிவோடு விசாரிப்பார். அவரோடு பேச்சுக் கொடுக்கும்போதே எந்த உபாதையாக இருந்தாலும் அது கிட்டத்தட்ட சரியாகிவிட்டது போல் தோன்றும்.
‘அதெல்லாம் ஒரு காலம்! இப்போதெல்லாம் அப்படி யார் இருக்கிறார்கள்?’ என்று ஏங்குபவர்களுக்காகவே டாக்டர் வைகுண்டத்தை கற்பனை உலகிலிருந்து எழுந்தருளச் செய்திருக்கிறார் ரகுநாதன் ஜெயராமன். சம்பாதிப்பது அல்ல, சேவையே அவர் நோக்கம். அதுவேதான் அவர் மதிக்கும் தர்மமும்கூட. அவருடைய மிடுக்கு, புத்திசாலித்தனம், சாதுரியம் அனைத்தையும் அவருடைய சிநேகம் விஞ்சிவிடுகிறது.
நமக்கெல்லாம் மிகவும் நெருக்கமானவராக, நம் குடும்பத்தில் ஒருவராக, ஒரு லட்சிய மருத்துவராக வைகுண்டம் உயர்ந்துவிடுகிறார். இவர் ஏன் நிஜத்தில் வரக்கூடாது என்று நாம் மெய்யாகவே கனவு காண ஆரம்பித்துவிடுகிறோம். மிருதுவான மொழிநடையில் ஓர் அசாதாரணமான உலகைக் கட்டமைத்திருக்கிறார் கதாசிரியர். அந்த உலகை நம்மால் ஒருபோதும் மறக்கமுடியாது.
Reviews
There are no reviews yet.