1 review for சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹225.00.₹210.00Current price is: ₹210.00.
இராமாயணமும் மகாபாரதமும் மூலப்பகுதியிலிருந்து விலகிச் செல்லும் நாட்டார் வழக்காற்று நிகழ்ச்சிகளை மையப்படுத்தும் இடத்தை கோடிட்டுக்காட்டுவது இந்த நூல். அரவானும் கர்ணனும் சீதையும் தமயந்தியும் யதார்த்தமாகப் பேசிய பதிவுகள் மூலப்பனுவல் களிலிருந்து மாறுபடுகின்றன. நாட்டார் மரபு எப்போதும் அதர்மத்தை நியாயப்படுத்தாது. சீதையை மறுபடியும் காட்டுக்கு அனுப்பியது நாட்டார் பாடகனுக்குக் கொடுமையாகத் தெரிகிறது. அவன் அதை நியாயப்படுத்தவில்லை. சீதையின் துக்கம் அவனை ஆவேசப்படுத்துகிறது. கர்ணன் பிறப்பின் காரணமாக ஒதுக்கப்படுவது நாட்டார் பாடகனுக்குத் தாங்க முடியவில்லை. இவற்றையெல்லாம் எளிமையாக கதை சொல்லியின் உத்தியுடன் இந்நூல் விவரிக்கிறது.
Delivery: Items will be delivered within 2-7 days
Kmkarthikn –
சீதையின் துக்கம்
தமயந்தின் ஆவேசம்.
சீதைக்கி ஏன் ஆவேசம் வரல? தமயந்திக்கி ஏன் சோகம் வரல?
வெரி சிம்பிள். சீதையின் புருஷர் ராமர். தமயந்தின் புருஷன் நளன்.
நாட்டார் வழக்காறு எனும் பெருங்கடலில் தொ.ப எனும் வல்லம் பிடிக்கத் தவறிய மீன்களை அள்ளும் வேலையில் அ.கா.பெருமாள் எனும் வல்லம் ஒன்று செய்து கொண்டிருந்ததை இத்தனை நாளும் கவனிக்காதது என் பிழை தான். தொ.ப அவர்கள் நாட்டார் வழக்காறுகளின் துணை கொண்டு புராணங்களை, இதிகாசங்களை எவ்வாறு கையாளுவாரோ கிட்டத்தட்ட அதே பாணி, இன்னுமே கொஞ்சம் எளிய பாணி அ.கா.பெருமாள் அவர்களுடையது. தொ.ப அவர்களின் ஒவ்வொரு பக்கமுமே சிறந்ந பக்கம் என்பது என்னோட தனிப்பட்ட கருத்து. அந்த உச்சி வரை அ.கா.பெருமாள் இன்னும் எட்டவில்லை என்பது வருத்தம் தான்.
புத்தகம் பேசுவது,
அரவாண்
கர்ணன்
அரிச்சந்திரன்
நளன்
ராமன்
இவர்களைப் பற்றி நாட்டார் புறத்தில் என்னென்ன கதைகள் மற்றும் எப்படியெப்படி கதைகள் இருக்கிறது என்பதை பட்டியலிட்டுக் காட்டுகிறது. அதுமட்டுமில்லாமல் மூலக்கதைகளில் இல்லாததும் வாய்மொழிக்கதைகளில் இருப்பதும் என பல தகவல்கள். புராணத்தின் பெரும் பெரும் கதைகளை Left handல் dealing செய்யும் வாய்மொழிக்கதைகளின் கெத்தையும் மறக்காமல் எடுத்துச் சொல்கிறது புத்தகம்.
அரவாண்
பாரதக் கதையில் அரவாண் ஒரு சிறிய பாத்திரம் தான். ஆனால் வழக்காற்றில் அரவாண் தெய்வமாக வழிபடப்படுகிறான். கிட்டத்தட்ட அரவாணின் கதை என நாலஞ்சு கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது அத்தனையையும் ஆவணப்படுத்தியிருக்கிறார். யாருடைய மகன், பாரதப்போரின் முதல் நாள் பலி கொடுக்கப்பட்டானா! இல்லை எட்டாம் நாள் போரில் பலியானானா? என பல கதைகள் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
பாரதக் கதையே வியாசர் பாரதம், வில்லி பாரதம், இன்னும் என்னென்ன பாரதம் இருக்கிறதோ அத்தனை பாரதத்திலும் ஒரு பாரதக்கதை சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதையிலுமே ஒவ்வொரு கதாப்பாத்திரத்தைப் பற்றி ஒவ்வொரு கதை சொல்லப்படுகிறது. நிஜமென்பது ஒன்று தானே இருக்க வேண்டும். சிந்தனை தான் மனிதருக்கு மனிதர் மாறுபடும். பாரதக்கதைகளைப் போலவே வாய் மொழிக்கதைகளில் வேறு வேறு கதைகள் சொல்லப்படுகிது. வாய்மொழிக்கதைகளின் தாக்கம் பாரதக்கதைகளில் மாற்றமா! இல்லை, பாரதக்கதைகளின் தாக்கம் வாய்மொழிக்கதைகளில் மாற்றமா? என பிரித்தறிய முடியாத ரகசியமாக இருக்கிறது.
அரவாணி எனும் சொல் அரவாண் என்ற வார்த்தையிலிருந்தே வந்திருக்கிறது. இதற்குமுன் இவர்களுக்கு பேடு, பேடி என்றே பெயர் இருந்திருக்கிறது. இந்தப் பேடு பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தில் பல இடங்களில் வருகிறது. பேடியாட்டம் மிகவும் பிரபலமானதாகவே போற்றப்பட்டிருயிறது. இன்று இவர்களை இந்து மதத்துடன் இணைத்தே பார்க்க வைப்பதும் ஒரு வித அரசியல் தான்.
“அரியது கேட்கின் வரிவடி வேலாய்
மக்கள் யாக்கையில் பிறத்தலும் அரிதே
மக்கள் யாக்கையில் பிறந்த காலையும்
மூங்கையும் செவிடும் கூனும்குருடும்
#பேடும் நீங்கிப் பிறத்தலும் அரிதே” – ஔவையார்.
கர்ணன் கதை எல்லோரும் அறிந்ததே. தாழ்ந்த சாதியாகக் கருதும் கர்ணனை பலரும் பல இடங்களில் கேவலப்படுத்துவது போல் பாரதக்கதையில் வருகிறது. கர்ணனை எவ்வளவுக்கு எவ்வளவு பாரதக்கதையில் தாழ்த்துகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உயர்கிறார் வாய்மொழிக் கதைகளில். ஏனென்றால் இது மக்களின் கதைகள். இது தான் அரவாணின் கதையிலும் நடந்திருக்கிறது. எவனை ஆகாதவன், தீண்டத்தகாதவன் என்கிறாயோ அவனைத் தான் நான் நாயகனாக்குவேன் என்று கங்கணம் கட்டி வேலை செய்தது போல் செய்திருக்கிது வாய்மொழிக் கதைகள்.
இந்த இரு கட்டுரைகளை படித்தவர்கள் மனதில் இப்படி சிந்தனை தோன்றும். இனியொரு பிறவி இந்த கிருஷ்ணனுக்கு இருக்கக்கூடாதுடா யெப்பான்னு. தீய எண்ணம் மனதில் மட்டும் இருந்தால் அவன் மனிதன். உருவமாகவே திரிந்தால் அவன் தான் கிருஷ்ணன். கிருஷ்ணன் என்ற பெயருக்கு அர்த்தம் கள்ளன் என்பதே. அதன்படி மகாபாரதத்தில் கிருஷ்ணன் கண்டிப்பாக வில்லனே. ஆனால் சில படங்கள்ல வில்லன்கள் பேர் வாங்கிட்டு போயிடற மாதிரி மகாபாரதக் கதைல வில்லன் பேர் வாங்கிட்டான். அதனாலே கள்ளன் ஒருவன் கடவுளாகிப் போனான்.
அரிச்சந்திரன்
வசிஷ்டருக்கும், விசுவாமித்திரருக்கும் நடந்த வேண்டாத சண்டையில் உருண்டது தான் அரிச்சந்திரனின் மண்டை. (அரிச்சந்திரன் மைண்ட் வாய்ஸ்) நான் பாட்டுக்கு செவனேனு தான்டா இருந்தேன். யார் வம்பு தும்புக்காச்சும் போனனா, ரிவன்ச்செல்லாம் உங்களுக்குள்ள நீங்க செஞ்சிக்கிறதுடா, என்னைய ஏன்டா இந்தப்பாடு படுத்துனீங்க.
அரிச்சந்திரனும் சாதரண ஆளில்லை. வர்ணாசிரமத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டாடும் அரசன். தெலுங்கிலிருந்து ஒரு அரிச்சந்திரன் கதை இருக்கிறது அதில் அத்தனை சோகமில்லை மாறாக spoof. செய்யப்பட்டிருக்கிறதாம். உலகின் முதல் Spoof இதுவாகத்தானிருக்கும்.
நளன் – தமயந்தி
பாரதக் கதையின் மீண்டுமொரு கிளைக்கதை. அதே ராஜ வாரிசுகள், அதே சூது, அதே வனவாசம் ஆனால் இதில் பெண் கோபமடைகிறாள். இதன் வாய்மொழிக் கதைகளில் தமயந்தி தான் முன்னிலை. நளவெண்பா புகழேந்திப் புலவரின் தமிழாக்கம்.
ராமன் – சீதை
ராவணன் வதத்திற்குப் பிறகான ராமனின் ஆட்சியையும், சீதையை கொல்ல லட்சுமணனுக்கு ஆணையிட்டதையும், லவன், குசன் எனும் சீதையின் மகன்களுடன் சண்டையிட்டு தோற்றது, லட்சுமணனை கொல்லத் துணிந்தது, இறுதியில் செத்தது என பிற்பாதி ராமாயணத்தை அப்படியே பேசுகிறது. ராமருக்கு வசிட்டர் உபதேசம் செய்யுமிடங்கள் ஞானவசிட்டம் என்று உள்ளதையும், பாரதத்தில் பகவத்கீதை என்பது இல்லை அது இடைச்செருகல் தான் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது.
நான் ஏதோ ரொம்ப சிம்பிளா, சீரியஸா சொல்லிட்டேன்னு நெனைக்கிறேன். புத்தகம் அப்படியில்லை. நல்ல தமாசான, விளாவாரியான புத்தகம். வழக்காற்று கதைகள் எதையுமே நான் சொல்லவேயில்லை. அதெல்லாம் படிச்சா செம காமெடியா இருக்கும். நல்ல மீம் மெட்டிரீயல். திரௌபதியின் கதை, இரண்டாவது இடம் போன்ற புராண இதிகாச புத்தகங்கள் வாங்கி படிக்காம வெச்சிருந்தேன். இப்போ ஒரு தெளிவு கிடைச்சிருக்கு அத எடுத்துப் படிக்கத் தேவையான போஷாக்கையும் அளித்திருக்கிறது இந்த புத்தகம்.
பக்கங்கள் :- 186
#Kmkarthikeyan_2021-21