ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் திப்பு சுல்தான். அவர் 1782 முதல் 1799 வரை மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்டபோது நடந்த சம்பவங்கள், நாடு பிடிக்கும் ஆசையில் களமிறங்கிய கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்ப்பதற்கு சந்தித்த சவால்கள், வெற்றிகள், நம்பிக்கை துரோகம் ஆகியவற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட “தி சுவார்டு ஆஃப் திப் சுல்தான்’ என்ற ஆங்கில வரலாற்று நாவலின் மொழி பெயர்ப்பாக இந்நூல் மலர்ந்துள்ளது.
நேர்மையும், இரக்க குணமும் கொண்ட திப்பு சுல்தான், நாட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபட்டதையும், 1790 முதல் 1792 வரை நடந்த மூன்றாவது மைசூர் போரின்போது மராட்டியர்களின் வஞ்சகத்தால் தோல்வியைத் தழுவும் நிலைக்கு தள்ளப்பட்டபோது, காரன்வாலிஸ் பிரபுவுடன் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்தில் தன்னுடைய இரு மகன்களைப் பணயமாக ஒப்படைத்த வரலாற்று நிகழ்வும் அருமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1799 மே 4-ஆம் தேதி நடந்த இறுதி யுத்தத்தின் பின்னணி, அதில் திப்புவின் நம்பிக்கைக்குரியவர்களே செய்த சதி, உண்மை விசுவாசிகள் பலரும் போரின் இறுதிமூச்சு வரை போரிட்டது குறித்த தகவல்கள் சுவைபட இந்த வரலாற்று நாவலில் இடம்பெற்றுள்ளமை, பாராட்டுக்குரியது.
வரலாற்றில் திப்பு சுல்தானுக்குரிய இடத்தை தமிழ் வாசகர்கள் முழுமையாக அறிந்து கொள்ள உதவுகிறது இந்நூல். வரலாறு படைக்க விரும்புவோர் அவசியம் படிக்க வேண்டிய சிறந்த நூல்.
நன்றி – தினமணி
[woo_product_slider id=”13843″]
Reviews
There are no reviews yet.