புயலிலே ஒரு தோணி
தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப.சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது.
இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை.
ப.சிங்காரத்தின் படைப்பு மொழி, நவீன உரைநடைகளில் மிகவும் விசேஷமானது. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாகக் கூடி வரவில்லை. மனக்குகை வாசல்கள் தாமாகவே திறந்து கொண்டு விட்டிருக்கின்றன. உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன.
கடலுக்கு அப்பால் நாவலில், புயலிலே ஒரு தோணியில் கடவுளின் மலர்ந்த சிரிப்பும் உள்ளுறைந்திருக்கின்றன.
கடலுக்கு அப்பால் பெறுமதியான ஒரு நாவல். அதிலிருந்து சகல பரிமாணங்களிலும் விரிந்து பரந்து விகாசம் பெற்றிருக்கும் மகத்தான படைப்பு, புயலிலே ஒரு தோணி. நம் மொழியின் நவீன பொக்கிஷம்.
சி. மோகன்

Dictionary of Accountancy and Commerce						
டிராகன்: புதிய வல்லரசு சீனா						
காலத்தின் கப்பல்						
அறம்						
எழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில்						
குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்						
காந்தியைச் சுமப்பவர்கள்						
ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்						
தாமஸ் சங்காரா வாழ்வும் சிந்தனையும்						
மால்கம் X: என் வாழ்க்கை						
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்						


Reviews
There are no reviews yet.