KARUVILIRUNDHU KADAISI VARAI
மனித வாழ்க்கையின் வளர்ச்சிப் பருவ நிலைகள், களவியலில் தொடங்கி கர்ப்பத்தில் ஆரம்பித்து, குழந்தைப் பருவம், பாலபருவம், பள்ளிப்பருவம், காதற்பருவம், குடும்பப்பருவம், தளர்ச்சிப்பருவம், மூப்புப்பருவம் என இறுதியில் இறப்பை நோக்கி பல்வேறு பரிணாம நிலைகளைக் கொண்டிருக்கிறது. வளரிளம் பருவம் மட்டுமின்றி அனைத்துப் பருவங்களிலும் கருவானது முதல் கடைசி காலம் வரையிலும் மனிதர்களுக்கு ஆரோக்கியம் என்பது முதன்மையாகிறது. ஆரோக்கியமும் ஆரோக்கியத்திற்கான ஆலோசனைகளும் சித்த மருத்துவத்தில் கொட்டிக் கிடக்கின்றன. கதிரவனின் ஒளிக்கற்றைகள் புக முடியாத மலைகளிலும் குகைகளிலும் கானகங்களிலும் வாழ்ந்திருந்த சித்தர்கள் மனிதகுல ஆரோக்கியத்துக்கு பெரும் பங்கு ஆற்றியுள்ளனர். நஞ்சையும் மருந்தாக்குவது சித்த மருத்துவத்தின் அற்புதங்களில் ஒன்று. நோய் வராமல் காக்கவும், வந்த நோயை தீர்க்கவும், உடலில் குறையும் சத்துகளை மீட்டெடுக்கவும் எண்ணற்ற ஆலோசனைகளைக் கூறுகிறது சித்த மருத்துவம்

வானம் வசப்படும்
சேகுவாரா - வளர்ச்சி புரட்சி வீழ்ச்சி
ராஜராஜ சோழனின் மறுபக்கம் 


Reviews
There are no reviews yet.