HINDU DESIYAM
இந்த ஐந்து குறுநூல்களின் தொகுப்பு இப்பொழுது ஏன் வெளிவருகின்றது என்பதை நீங்கள் நன்றாகவே உணர்வீர்கள். மாறிவரும் சமூக, அரசியல் சூழலில் ஓர் ஒற்றைக் கலாசாரத்தை முன்னிறுத்துதல் என்பது இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கு எதிரானது. அதற்கு வைதீகம், பாரதக் கலாசாரம், பார்ப்பனியம், வேதாந்தம், இந்துத்துவம் என்று பல பெயர்கள் வழங்கி வருகின்றன. இப்படிப் பல பெயர்களில் வழங்கி வரும் இந்தச் சித்தாந்தத்தைத் தோலுரித்துப் பார்க்கவும், காட்டவும் நான் செய்த சிறுசிறு முயற்சிகளே இந்தக் குறுநூல்கள் ஆகும். கட்டி எழுப்பப்பெற்ற ‘இந்து’ என்னும் பிம்பம் யாருடைய நலன்களுக்குச் சேவை செய்யும் என்பதை இந்த நூல் உங்களுக்குச் சொல்லும். வேதம் என்பதைப் புனிதமாக்கி, அதைப் பழமைக்குள் திணித்து, விவாதத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரமாக்கும் முயற்சி பல காலமாக இங்கே நடைபெற்று வருகின்றது. அதனை இழை இழையாக எடுத்து அலசும் முயற்சியே இந்தக் குறுநூல்கள். -தொ.பரமசிவன்
Reviews
There are no reviews yet.