Be the first to review “வீர சாவர்க்கர் – ஈடு இணையற்ற போராளி”
You must be logged in to post a review.
₹100.00
விநாயக தாமோதர சாவர்க்கர் என்கிற வீர சாவர்க்கர் பாரத சுதந்திரத்திற்காக போராடிய வீர மகன். இவருக்கு நிகராக இன்னொரு போராளியை ஒப்பிடவே முடியாது. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றிலேயே மிக அதிகமாக 50 ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்றவர்.அத்தண்டனையை இன்முகத்துடன் வரவேற்றவர்.
அந்தமான் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டு கடும் சித்திரவதைக்கு ஆளானவர். சாவர்க்கரின் சகோதரர்கள் மூவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளனர். அவரது மூத்த சகோதரரும் அதே அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இளைய சகோதரர் புனே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 10 ஆண்டுகள் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாவர்க்கர், மக்களிடையே ஏற்பட்ட எழுச்சியின் காரணமாக அங்கிருந்து ரத்தனா கிரியில் கடும் கண்காணிப்பில் பதிமூன்று ஆண்டுகள் வைக்கப்பட்டார். அப்போதும் கூட அவர் கையை கட்டிக்கொண்டு சும்மா இருக்கவில்லை. அங்கே இருந்தபடியே நாடெங்கிலும் சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம், உற்சாகம் அளித்து வந்தார். தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் ஆங்கிலேயர்களால் தண்டனைக்கு ஆளான சாவர்க்கர் சகோதரர்களின் குடும்ப சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.
சாவர்க்கர் வெறும் அரசியல் மட்டும் ஈடுபடவில்லை. அவர் சமுதாய சமத்துவத்திற்காக உரக்க குரல் எழுப்பியவர். டாக்டர் அம்பேத்கர் மேற்கொண்ட பல சமுதாய சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நின்றவர். வரலாற்று ஆசிரியர், மராட்டிய இலக்கியத்திற்கு மாபெரும் பங்காற்றியுள்ளார். அவரது சமுதாயம், மற்றும் சமூக சீர்திருத்த பங்களிப்புகள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியாளர்களால் மூடி மறைக்கப்பட்டு விட்டது. அது மட்டும் அல்ல அவர் மீது அவதூறு பழிகளைச் சுமத்தியது.
நாட்டின் நலன் பற்றியே சதா சர்வகாலமும் சிந்தித்து கொண்டிருந்தவர். அவர் ஒவ்வொரு காலகட்டத்திலும் கூறிய அனைத்தும் இன்றும் கூட பொருத்தமாகவே காணப்படுகிறது. தொலைநோக்கு பார்வையும், தெளிந்த சிந்தனையும் கொண்ட வீர சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு பற்றிய ஒரு சிறு நூலினை தமிழக தேச பக்தர்களுக்காக வெளியிடுவதில் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
– வெளியீட்டாளர்
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.