நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும் உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.
ஆனால் உண்மை அதுவல்ல.உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகு சிலர். காய்களை நகர்த்துபவர்கள் வேறு சிலர். அவர்களால் நகர்த்தப்படும் அல்லது வெட்டி வீசப்படும் காய்கள் மட்டும்தான் நாம். அதிர்ச்சியைக் குறைத்து அடுத்த பத்தியையும் வாசியுங்கள்.
நாம் உடுத்தும் உடை தொடங்கி நாம் பயன்படுத்தும் ஆடம்பர வசதிகள் வரை அனைத்தையும் தீர்மானிப்பது நாம்தான் என்று நமக்குள்ளே மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை முற்றிலும் வேறானது. ஒரு குறிப்பிட்ட குழுவினர்தான் நம்மை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.நம்முடைய ஒவ்வொரு நகர்வையும் அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.
அதிகார வர்க்கம், ஆட்சியாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் , வங்கிகள் என்று இந்த உலக நகர்வுக்கு ஒத்தாசையாக இருக்கும் ஒவ்வொன்றும் அவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன.திடீரென ஒரு நாடு திவால் அடையலாம். இன்னொரு நாடு திடீர் வளர்ச்சி பெறலாம். ஏதோவொரு தேசம் பெரும் யுத்தத்துக்குப் பலியாகலாம். ஒரு நாட்டில் அரசியல் புரட்சி ஏற்படலாம். ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் தீவிரவாதம் பெருக்கெடுத்து ஓடலாம். இப்படி உலக வரலாறு நெடுக நிகழ்ந்த பெரும்பாலான ஆக்க/அழிவுப் பூர்வ நிகழ்வுகளின் பின்னணியில் இவர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
பீடிகை போதும். பெயரைச் சொல்லிவிடலாம்.
இவர்களுக்கு இல்லுமினாட்டிகள் என்று பெயர். இல்லுமினாட்டிகளின் உருவாக்கம் தொடங்கி அவர்கள் இந்த உலகத்தையே தங்களுடைய உள்ளங்கைக்குள் பிடித்துவைத்திருப்பது வரையிலான பரிணாம வளர்ச்சியை சம்பவங்களின், நிகழ்வுகளின் வழியே காட்சிபடுத்தும் புத்தகம் இது.
நம்மைச் சுற்றி நம் சொந்தங்கள்தான் இயங்குகிறார்கள். நம் எதிரிகள்கூட நமக்குத் தெரிந்தவர்கள்தான் என்ற உங்களுடைய நம்பிக்கையில் இந்தப் புத்தகம் கடுமையான அசைவை ஏற்படுத்தப் போகிறது. அதன் பொருள், உங்களைச் சுற்றி எதிரிகளே இருக்கிறார்கள் என்பதல்ல.
கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் உங்களைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்து , தங்கள் விருப்பத்திற்கேற்ப உங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எச்சரிப்பதுதான் புத்தகத்தின் நோக்கம். பரபரப்பும் பதைபதைப்புமாகப் படிக்கவேண்டிய புத்தகம். கூடவே, பக்குவத்தையும் கொடுக்கும்! வாசித்துப் பாருங்கள்!

Caste and Religion
துடிக்கூத்து
Arya Maya (THE ARYAN ILLUSION)
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
அக்கடா
16 கதையினிலே
மோடி மாயை
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
அபாய வீரன்
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
இந்தியாவில் சாதிகள்
சட்டப்படி நாம் இன்னும் சூத்திரரே!
அஞ்சா நெஞ்சன்
அண்டசராசரம்
அக்டோபர்: ரஷ்யப் புரட்சியின் கதை
கடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்
அற்புதமான களஞ்சியம்
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
சங்க இலக்கியச் சோலை
அவளது வீடு
Hello, Mister Postman
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
முறைப்பெண்
18வது அட்சக்கோடு
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
அத்தாரோ
அபிதா
மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு
சிலப்பதிகாரச் சுருக்கம் 
Reviews
There are no reviews yet.