நேர்க்கோட்டில் போகிற ஒரு வாழ்க்கையுண்டு. அதில் தர்மங்கள் உண்டு. தர்மங்கள் குறித்த சங்கடங்கள் உண்டு. தர்மம் என்று சொல்லப்படுபவற்றை எட்டி உதைக்கும் ஒரு நிழல் உலக வாழ்வும் அந்தக் கோட்டை ஒட்டியே கிளர்ந்தெழுந்து வருகிறது. அரசியல் சார்ந்த வணிகத்தில் அவர்களின் இருப்பு தவிர்க்க முடியாதது. ஏழைகள் நிறைந்த தேசத்தில் அவர்களது தலைவிதியைத் தீர்மானிப்பவர்களுக்கு நெருக்கமான இருட்டு உலகத்தைப் பதிவு செய்யும் நாவல் இது. தரையிலிருந்து புறப்பட்டு கோபுரத்தைச் சாய்க்க விளையும் இளம் எத்தனத்தை அதன் பின்னணியோடு விரிக்கிறது. ஒழுக்கவியலைப் போற்றும் தட்டிலிருந்து புறப்பட்ட ஒருத்தன், வாழ்வின் நிமித்தமாக, அது சொல்லும் வெற்றியின் நிமித்தமாக, அத்தனையையும் போட்டுக் காலில் மிதித்துக் கடந்து போய் இதுவரை கற்பிக்கப்பட்ட வாழ்வைக் கேள்விக்குள்ளாக்குகிறான். தர்மம் எது? தர்மனிடம் கேட்கப்பட்ட அதே கேள்வி வேறொரு உலகத்தின் பின்னால் நின்று மறுபடியும் வலுவாகக் கேட்கப்படுகிறது. தர்மத்தின் மீது அக்கறையே இல்லாத நட்சத்திர வாழ்விற்குப் பின்னால் இருக்கிற சல்லித்தனங்களைக் காட்சிப்படுத்துவதன் வழியாக ஒரு புதிய திறப்பை வாசகர்களுக்கு அளிக்கிறார் சரவணன் சந்திரன்.

ரோலக்ஸ் வாட்ச்
Publisher: கிழக்கு பதிப்பகம் Author: சரவணன் சந்திரன்₹200.00
5 in stock
தர்மனிடம் கேட்கப்பட்ட அதே கேள்வி வேறொரு உலகத்தின் பின்னால் நின்று மறுபடியும் வலுவாகக் கேட்கப்படுகிறது. தர்மத்தின் மீது அக்கறையே இல்லாத நட்சத்திர வாழ்விற்குப் பின்னால் இருக்கிற சல்லித்தனங்களைக் காட்சிப்படுத்துவதன் வழியாக ஒரு புதிய திறப்பை வாசகர்களுக்கு அளிக்கிறார் சரவணன் சந்திரன்.
Delivery: Items will be delivered within 2-7 days

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
அடிமனதின் சுவடுகள்
இதுவே சனநாயகம்!
அந்தமான் நாயக்கர்
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
13 மாத பி.ஜே.பி ஆட்சி
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
Arya Maya (THE ARYAN ILLUSION)
Caste and Religion
Gokul –
நூல் முழுவதும் கதாநாயகனின் பெயரை குறிப்பிடவே இல்லை.ஏன் என்று சிந்திக்கும் போதுதான் தோன்றியது இப்படி பட்டவர்களின் பெயரை அறிய விரும்ப மாட்டோமென தெரிந்தே கூறவில்லை போலும். ஆசிரியர் கதாநாயகன் நம்மிடம் பேசுவது போல் கதையை சொல்கிறார்.வேலை என்பதே செய்யாமல் வாழ்வில் எப்படி வெற்றி பெற்றான் என்பதை நினைவில் இருக்கும் ஒவ்வொரு மனிதர்கள் கதையையும் இவனின் வளர்ச்சியையும் சொல்கிறான்.
ரோலக்ஸ் வாட்ச்சில் உண்மை எது பொய் எது என்பதை பிரிப்பது கடினம்னு ஒரு வரியில் சொல்லியிருக்கார்.
அரசியலில் இரண்டாம் நிலையில் ஆள் சேர்ப்பது டீலிங் முடிப்பது இதை மட்டுமே தொழில் என கொண்டு பிறர்மனை நோக்குவதையும் அதில் ஒன்றாக சேர்த்து எந்த வேலை செய்தாவது செட்டில் ஆகிவிட வேண்டுமென துடிக்கும் இளைஞனின் நினைவிலிருக்கும் மனிதர்கள் மற்றும் காட்சிகளின் மேகங்களை கோர்த்திருக்கிறார்.