அமேசானின் வெற்றிக்கதை என்பது மாபெரும் வெற்றிகளை ஈட்டிவரும் ஒரு பெரும் நிறுவனத்தின் கதையா அல்லது அதைத் தோற்றுவித்த ஓர் அசாதாரணமான ஆளுமையின் கதையா? இரண்டுமேதான். அமேசான் என்பது ஆலமரம் என்றால் அதன் விதை, ஜெஃப் பெஸோஸ். எனவே இது ஒரு விதையின் கதை. எனவே, இது ஒரு மரத்தின் கதையும்கூட. அமெரிக்காவில் ஒரு மூலையில் மிகச் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பி பிரமிப்பூட்டும் வெற்றிகளைப் பெற்றது எப்படி? அமேசானைத் தோற்றுவித்த ஜெஃப் பெஸோஸ் உலகப் பணக்காரர்கள் வரிசையில் பில் கேட்ஸுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது எப்படி? எதிர்காலத்தில் இணையம்தான் உலகை ஆளப்போகிறது என்பதை ஜெஃபால் எப்படி முன்கூட்டியே உணரமுடிந்தது? புத்தகங்களை ஆன்லைனில் விற்பதன்மூலம் லாபம் ஈட்டமுடியும் என்னும் நம்பிக்கையை அவர் எப்படிப் பெற்றார்? புத்தகங்களில் தொடங்கி உலகிலுள்ள அனைத்தையும் வாங்குவதற்கான பிரமிப்பூட்டும் இணையக் கடையாக அமேசானை அவர் வளர்த்தெடுத்தது எப்படி? அமேசான் தன் பணியாளர்களை நடத்தும் விதம் குறித்தும் ஜெஃப் தன் போட்டியாளர்களைச் சிதறடிக்கும் முறை குறித்தும் எழும் பல்வேறு குற்றச் சாட்டுகள் உண்மையா? வாழ்விலும் பணியிலும் ஜெஃப் பெஸோஸை நம்முடைய முன்னுதாரணமாகக் கொள்ளமுடியுமா? எனில் அவரிடமிருந்து நாம் என்னென்ன வெற்றிப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? எஸ்.எல்.வி. மூர்த்தியின் இந்நூல் மிக சுவாரஸ்யமான முறையில் ஒரு வண்ணமயமான வாழ்வை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

அமேசான் ஒரு வெற்றி கதை
Publisher: கிழக்கு பதிப்பகம் Author: எஸ்.எல்.வி.மூர்த்தி₹150.00
புத்தகங்களில் தொடங்கி உலகிலுள்ள அனைத்தையும் வாங்குவதற்கான பிரமிப்பூட்டும் இணையக் கடையாக அமேசானை அவர் வளர்த்தெடுத்தது எப்படி? அமேசான் தன் பணியாளர்களை நடத்தும் விதம் குறித்தும் ஜெஃப் தன் போட்டியாளர்களைச் சிதறடிக்கும் முறை குறித்தும் எழும் பல்வேறு குற்றச் சாட்டுகள் உண்மையா? வாழ்விலும் பணியிலும் ஜெஃப் பெஸோஸை நம்முடைய முன்னுதாரணமாகக் கொள்ளமுடியுமா? எனில் அவரிடமிருந்து நாம் என்னென்ன வெற்றிப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? எஸ்.எல்.வி. மூர்த்தியின் இந்நூல் மிக சுவாரஸ்யமான முறையில் ஒரு வண்ணமயமான வாழ்வை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.
Delivery: Items will be delivered within 2-7 days

சிலிங்
செல்லாத பணம்
சில்வியா பிளாத் - மணிக்குடுவை
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான்
செங்கிஸ்கான்
சேர மன்னர் வரலாறு
Reviews
There are no reviews yet.