ARUNAGIRIP PURAANAM (HARD BOUND)
உலகில் விளங்கும் சிவத்தலங்கள் எண்ணற்றவை; அத்தலங்களுள் முதன்மையானது திருவண்ணாமலை ஆகும். அதனால் அத்தலம் ‘தலேச்சுரம்’ என்றும், ‘சிவலோக நகரம்’ என்றும் அழைக்கப் பெறுகிறது.நினைத்தாலே முத்தி அளிக்கும் தலம் திருவண்ணாமலை என்றும் அருள்நூல்கள் உரைக்கின்றன. ஒருவர் பிறப்பதும் இறப்பதும் தொழுவதும் அவர் கையில் இல்லை. ஆனால் எத்தகையவர்களுக்கும் ‘நினைத்தல்’ என்பது எளிது. அதனால் நினைக்க முத்தி அளிக்கும் திருவண்ணாமலையே அனைத்துத் தலங்களை விடவும் சிறயத தலமாகும்.திருவண்ணாமலைத் திருத்தலத்துக்குத் தமிழில் இரண்டு தலபுராணங்கள் இருக்கின்றன. அவை (1) சைவ எல்லப்ப நாவலர் பாடிய அருணாசல புராணம், (2) சிதம்பரம் மறைஞான சம்பயத நாயனார் பாடிய அருணகிரிப் புராணம் என்பன.அருணாசல புராணமும் அருணகிரிப் புராணமும் பாடல் எண்ணிக்கையில் ஏறக்குறைய சம அளவிலான நூல்கள் என்றாலும், அருணகிரிப் புராணத்துக்கு உரை ஏதும் எழுதப் பெறவில்லை. மூலமாக மட்டும் ஒருமுறை இந்நூல் வெளியிடப் பெற்றுள்ளது. அதுவும் இப்பொழுது கிடைப்பதில்லை. நூலுக்கு உரை இருந்தால் அன்பர்கள் படித்துப் பயன்பெற உதவியாக இருக்கும் என்று மூலம் மற்றும் உரையுடன்இப்போது வெளியிடப் பெறுகிறது.
Reviews
There are no reviews yet.