பயத்திலிருந்து விடுதலை:
பயந்திருக்கும் மனம் எவ்வாறு அன்பு செலுத்த முடியும்?, சார்ந்திருக்கும் மனதிற்கு ஆனந்தம் என்றால் என்ன என்று தெரியுமா? என்பது போன்ற கேள்விகள் பலவற்றிற்கு முற்றிலும் புதிய கோணத்தில் கிருஷ்ணமூர்த்தி அளிக்கும் விளக்கங்கள் அற்புதமானவை. பயம் மனதை மந்தமாக்கி, நம்மை உணர்ச்சியற்ற ஜடங்களாக்குவதை கிருஷ்ணமூர்த்தி அருமையாக சுட்டிக்காட்டுகிறார். கடந்த கால ஞாபகங்களளால் தோற்றுவிக்கப்பட்ட கருத்துகளை ஆராய்வதன் மூலம் பயத்தின் ஆணிவேரை கண்டறிய முடியாது என்று அவர் வாதிடுகிறார். நம்மை விலங்கிடும் பயத்திலிருந்து தப்பித்து செல்ல நாம் சதா முயற்சிப்பதையும், அதற்காக நாம் கையாளும் தப்பித்தல் வழிகளையும் விவரித்து நமக்கு உணர்த்துகிறார். பயத்திலிருந்து விடுபட வேண்டும் என்று உறுதி எடுப்பதின் மூலம், நம்மை பலவீனப்படுத்தும் பயத்தின் விளைவுகளை அகற்றி விடமுடியும் என்ற கருத்தை அவர் எதிர்க்கிறார்.
பயத்தின் வேராக அமைந்திருக்கும் காரணத்தைப் புரிந்து கொள்வது, பயத்திலிருந்து மனதிற்கு விடுதலை அளிக்கும் என்று அவர் ஆலோசனை கூறுகிறார். அனைவரும் படிக்க வேண்டிய அருமையான நூல் இது.
Reviews
There are no reviews yet.