1 review for C.B.I : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹120.00.₹115.00Current price is: ₹115.00.
ஐம்பது வருடம் முன்பு கட்சி தொடங்கியவர்கள் முதல் நேற்று கட்சி தொடங்கியவர்கள் வரை ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுக்கிறேன் என்கிறார்கள். ஆனால், இந்தியாவை ஊழல் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அதிகாரவர்க்கத்தின் அனைத்து மட்டங்களிலும் லஞ்சம் சகஜமாகிவிட்டது.
ஊழலுக்கு எதிராகப் பலர் வாய் கிழியக் கத்தினாலும், அதை வெளியே கொண்டு வருவதில் கடைசி வாய்ப்பாக நாம் நம்பியிருப்பது சி.பி.ஐயை மட்டும்தான்.
சி.பி.ஐ என்பவர்கள் யார்? இந்தப் பணிக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? அவர்களின் விசாரணை கைது நடவடிக்கைகளில் எப்படியெல்லாம் யுக்திகளை கையாள்கிறார்கள்? அரசியல் தலையீடுகளுக்குப் பணிய வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏன் வருகிறது?
இப்படி, நம்மில் பலருக்கும் சி.பி.ஐ குறித்து பல கேள்விகள் இருக்கிறது.
இத்தனைக் கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் புரிந்துகொள்ள உதவும்.
Delivery: Items will be delivered within 2-7 days
Aravind –
நம் நாட்டில் ஊழல் நாளுக்கு அதிகம் ஆகி கொண்டுதான் இருக்கிறது. ஊழலுக்கு எதிராக பல பேர் பேசினாலும் நாம் கடைசியாக வாய்ப்பாக நம்பிக் கொண்டிருப்பது சிபிஐ தான். யார் இந்த சிபிஐ? எப்போது இவர்கள் உருவாக்கபட்டார்கள்? எந்த காரணத்திற்காக இவர்கள் உருவாக்கபட்டார்கள்? சிபிஐ யின் சேர்வதற்கான தகுதிகள் என்ன? எந்த அடிப்படையில் சிபிஐ இயங்குகிறது போன்ற பல விஷயங்களை நம்மால் இந்த புத்தகம் மூலம் அறிய முடியும். மேலும் பல பிரபல வழக்குகள் ஆரூஷி கொலை வழக்கு, ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு, மாட்டு தீவன ஊழல் வழக்கு, சத்யம் நிறுவனம் நிதி மோசடி வழக்கு ஆகிய பல வழக்குகளில் சிபிஐ எவ்வாறு செயல்பட்டது, அதில் நடந்த அரசியல் தலையீடுகள் என்னென்ன ஆகியவை தெள்ள தெளிவாக விளக்குகிறது. வெளிநாடுகளில் தப்பி செல்லும் குற்றவாறிகளை எவ்வாறு கையாளுகிறார்கள் போன்ற பல விஷயங்கள் இந்த புத்தகத்தில் விளக்கபட்டிருக்கிறது. மிகவும் சவாலான துறை தான் இந்த சிபிஐ. சிபிஐ பற்றி தெரிந்துக்கொள்ள நினைப்பவர்கள் இந்த புத்தகத்தை கண்டிப்பாக படிக்கலாம்.