மொபைல் வாலெட், பேடிஎம், இணையப் பரிவர்த்தனை என்று ரொக்கத்துக்கான அற்புதமான மாற்றுகள் ஏற்கெனவே வெற்றிபெற ஆரம்பித்துவிட்டன. இருந்தும் சந்தேகங்களும் அச்சங்களும் முற்றிலுமாக விலகிவிடவில்லை.
பணக்காரர்களும் படித்தவர்களும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறலாம்; ஏழைகளும் படிக்காதவர்களும் என்ன செய்வார்கள்?
அடிப்படை வசதிகளே அற்ற கிராமங்களில் டிஜிட்டல் பணம் சாத்தியமா?
வயதானவர்களுக்கு நவீனத் தொழில்-நுட்பமெல்லாம் புரியுமா?
பெட்டிக்கடைகளில் இது வேலை செய்யுமா?
டிஜிட்டல் பணத்தால் அடித்தட்டு மக்களுக்கு என்ன லாபம்?
டிஜிட்டல் பணம் பாதுகாப்பானதா?
வளர்ந்த நாடுகளிலும் பின்தங்கிய நாடுகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது?
விரிவாக அலசுகிறது இந்நூல்.
டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு இணையமோ ஸ்மாட்போனோ அவசியமில்லை, சாதாரண மொபைலே போதுமானது என்று விரிவான ஆதாரங்களுடன் நிறுவுகிறார் சைபர் சிம்மன். அதனாலேயே அடித்தட்டு மக்களுக்கான முதன்மையான தொழில்நுட்பமாகவும் டிஜிட்டல் பணமே இருக்கப்போகிறது.
அனைவரையும் உள்ளடக்கிய, அனைவருக்கும் பலனளிக்கக்கூடிய ஒரு நிதிச் சமூகத்தை இந்தியாவில் உருவாக்கவேண்டுமானால் அதற்கு டிஜிட்டல் பணமே ஒரே வழி என்பதை எளிமையாகவும் திறமையாகவும் புரியவைக்கிறது இந்நூல்.

எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை 
Reviews
There are no reviews yet.